சினிமாவுக்கு முழுக்கு போடுகிறாரா த்ரிஷா... | பாலகிருஷ்ணாவிற்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் | விஜய் ரசிகர்களுக்கு காத்திருக்கும் அதிர்ச்சி | லூசிபர் 2ம் பாகத்தின் டீசர் அப்டேட் | பிறந்தநாளில் பிரமாதம்: உடல் உறுப்புகளை தானம் செய்தார் டி.இமான் | கும்பமேளாவில் பாசி மணி ஊசி விற்றவர் : சினிமா நடிகை ஆகிறார் மோனலிசா | பிளாஷ்பேக் : கடைசி வரை அப்பா, தாத்தாவாக நடித்த வி.எஸ்.ராகவன் | துணை நடிகர் ஜெயசீலன் காலமானார் | பிளாஷ்பேக் : தேசிய விருதை இழந்த மீனா | விஷால் உடல்நலம் குறித்து அவதூறு : 3 யு-டியூப் சேனல்கள் மீது வழக்கு |
கடந்த 2022ல் மம்முட்டி, பார்வதி நடிப்பில் வெளியான படம் 'புழு'. ரதீனா என்கிற பெண் அறிமுக இயக்குனர் இயக்கிய இந்த படத்தில் மம்முட்டியின் தங்கை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார் பார்வதி. தங்களது ஜாதியை விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்து கொண்டதால் வெகுகாலமாக அவரை ஒதுக்கி வைத்திருக்கும் மம்முட்டி, ஒரு கட்டத்தில் அதனை தாங்கிக் கொள்ள முடியாமல் அவரையும் அவரது கணவரையும் கவுரவ கொலை செய்வதுதான் படத்தின் கதை. பொதுவாகவே சில சமூகங்களில் ஆணவக் கொலை நடக்கிறது என்பதால் இந்த படம் வெளியான சமயத்தில் எந்தவித பிரச்னையும் கிளம்பவில்லை.
படம் வெளியாகி தற்போது இரண்டு வருடங்கள் ஆகிவிட்ட நிலையில் படத்தின் இயக்குனர் ரதீனாவின் கணவர் சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றின் மூலம் தற்போது மிகப்பெரிய சர்ச்சை வெடித்துள்ளது. அந்த பேட்டியில் அவர் படம் பற்றி கூறும்போது, இது பிராமண சமுதாயத்தை எதிர்ப்பதற்காக எழுதப்பட்ட கதை என்று கூறியதுடன், அதில் மம்முட்டியின் நடிப்பையும் விமர்சித்து இருந்தார்.
இந்த நிலையில் அந்த குறிப்பிட்ட சமூகத்தை சேர்ந்தவர்களும் வலதுசாரி அமைப்புகளும் மம்முட்டியை கடுமையாக விமர்சிக்க துவங்கியுள்ளனர். அதே சமயம் கேரளாவில் உள்ள அரசியல் கட்சி தலைவர்கள், மாநில அமைச்சர்கள் பலரும் மம்முட்டிக்கு ஆதரவாக தங்களது கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.
குறிப்பாக மலையாள சினிமாவின் அடையாளமாக, மலையாள சினிமாவை உலக அளவில் கொண்டு செல்ல காரணமாக இருந்த மம்முட்டியை இதுபோன்று ஜாதி, மத சர்சைக்குள் கொண்டுவரக் கூடாது என்றும் சர்ச்சையை கிளப்பியவர்களுக்கு கண்டனங்களை தெரிவித்துள்ளனர்.
மம்முட்டி நடித்துள்ள டர்போ திரைப்படம் இன்னும் ஒரு வாரத்தில் வெளியாக உள்ள நிலையில் இப்படி ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது அந்த படத்திற்கான விளம்பரமாகவே அமையும்.