கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

மலையாள திரையுலகில் விருதுக்காகவே படம் எடுப்பவர்களில் பெயர் பெற்ற ஒருவர் இயக்குனர் சணல்குமார் சசிதரன். நடிகர் டொவினோ தாமஸ் நடிப்பில் வழக்கு என்கிற படத்தை இயக்கியுள்ளார். 2020ல் துவங்கப்பட்ட இந்த படம் 2022ல் ரிலீஸுக்கு தயாரானது. சணல் குமாரும், டொவினோ தாமஸ் இணைந்து இந்த படத்தை சிறிய பட்ஜெட்டில் தயாரித்துள்ளனர். இந்த படத்தை திரையரங்குகளில் வெளியிட்டால் தனது இமேஜ் பாதிக்கும் என்பதால் இதை வெளியிட விடாமல் டொவினோ தாமஸ் தடுப்பதாகவும், ஓடிடி நிறுவனங்கள் இந்த படத்தை பெற்றுக்கொள்ள மறுப்பதாகவும் கடந்த சில நாட்களாக குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார் சணல் குமார்.
இதுகுறித்து விளக்கம் அளித்துள்ள டொவினோ தாமஸ் கூறும்போது, “சணல் குமாருடன் பணியாற்ற போகிறேன் என்று சொன்னதும் என் நட்பு வட்டாரத்தில் பல பேர், அவருடனா.. வேண்டாம் என்று கூறினார்கள். ஆனால் அதையும் மீறித்தான் இந்த படத்தில் பணியாற்றினேன். எனக்கு உடன்பாடு இருந்ததால் தான் படத்தின் தயாரிப்பாளராகவும் என்னை இணைத்துக் கொண்டேன். படப்பிடிப்பு நாட்கள் ரொம்பவே மகிழ்ச்சியாக தான் சென்றது.
சமீபத்தில் கேரளாவில் நடைபெற்ற சர்வதேச திரைப்பட விழாவில் கூட இந்த படம் விருது பெற்றது. ஆனால் திரையரங்குகளில் வெளியிட்டால் இந்த படத்திற்கு நஷ்டம் வரும் என்பதால் வேண்டாம் என்று கூறினேன். அதே சமயம் ஓடிடியில் வெளியிடலாம் என்றால் ஏற்கனவே மஞ்சு வாரியர் மீது அவர் கூறிய கருத்துக்களுக்காக கைது செய்யப்பட்டு அதன் மூலம் அவருக்கு ஏற்பட்ட கெட்ட பெயர் காரணமாக ஓடிடி நிறுவனங்கள் இந்த படத்தை வாங்க மறுக்கின்றன” என்று கூறியுள்ளார்.