மீண்டும் ஹிந்தி படத்தில் கீர்த்தி சுரேஷ்? | ஆகஸ்ட் 14ல் ரஜினியின் கூலி திரைக்கு வருகிறது? | சிம்புவிற்கு ஜோடியாகும் கயாடு லோகர் | நீண்ட இடைவெளிக்கு பின் விஜய் படத்தில் இணைந்த நிழல்கள் ரவி | கார்த்தி சுப்பராஜ் பிறந்தநாள் : ரெட்ரோ படத்தின் 55 வினாடி மேக்கிங் வீடியோ வெளியீடு | இளையராஜாவிற்கு தங்கச்சங்கிலி அணிவித்து வாழ்த்திய சிவகுமார் | ரவி அரசு இயக்கத்தில் விஷால்? | 'கொய்யா' விற்ற பெண் பற்றி பிரியங்கா சோப்ரா பெருமிதம் | ராஜமவுலி, மகேஷ்பாபு படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு நிறைவு | சச்சினுக்கு முன்பு ரீ ரிலீஸ் ஆகும் பகவதி |
பிரபல கன்னட நடிகர் சேத்தன் சந்திரா. பியூசி, பிரேமிசம், ராஜதானி, பிளஸ், பசார், மெலடி டிராமா உள்ளிட்ட ஏராளமான படங்களில் நடித்துள்ளார். பெங்களூரில் கக்கலிபுரா பகுதியில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறார்.
நேற்று அவர் அந்த பகுதியில் உள்ள ஒரு கோவிலுக்கு தனது தாயாருடன் சாமி கும்பிட சென்றார். சாமி கும்பிட்டு விட்டு மீண்டும் வீட்டுக்கு காரில் திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது அவரது காரை வழிமறித்த 20 பேர் கொண்ட கும்பல் சரமாரியாயாக தாக்கியது. இதில் பலத்த காயம் அடைந்த சேத்தன் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. இதுகுறித்து போலீசிலும் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து சேத்தன் சந்திரா வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் ''ஒருவர் என்னிடம் கொள்ளையடிக்க முயன்றார். திடீரென்று 20 பேர் என்னை சூழ்ந்தனர். அவர்கள் என்னை அடித்து கடுமையாக தாக்கினார்கள். மூக்கிலும் குத்தினார்கள். காரையும் சேதப்படுத்தினர். இதனால் ஆஸ்பத்திரிக்கு சென்று சிகிச்சை பெற்றுக் கொண்டேன்'' என்று கூறியுள்ளார்.
இந்த சம்பவம் கன்னட திரையுலகில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. கொடுக்கல், வாங்கல் தகராறில் இந்த தாக்குதல் நடந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.