நாட்டின் மிகப்பெரிய நட்சத்திரத்தோடு போட்டியிட முடியுமா? சுதா கொங்கரா | மீண்டும் தள்ளிப்போனது 'தெறி' ரீ ரிலீஸ் | மதுரை, திருநெல்வேலி, திருச்செந்துார்... ஜீவா ஓடுவது ஏன்? | மீண்டும் ஷாருக்கானுடன் இணையும் அட்லி: 'டான் 3'ஐ இயக்குகிறாரா? | ரவி மோகனின் நிழலாக இருக்கும் கெனிஷா | 35 ஆண்டுகளுக்கு பிறகும் ஹிட்டான 'சுந்தரி கண்ணால் ஒரு சேதி' | பிளாஷ்பேக்: மறைந்த மலையாள நடிகர் ஜெயனை நினைவு கூறும் ஒரே தமிழ் திரைப்படம் “பூட்டாத பூட்டுக்கள்” | மங்காத்தா, தெறி: ரீரிலீஸ் டிரைலர் மோதல் | தோல்வியை நோக்கி, பிரபாஸின் 'தி ராஜா சாப்' | பார்வதியாக நடிக்கும் நபா நடேஷ் |

சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனத்தின் 99வது படத்தில் விஷால் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்த படத்திற்கு 'மகுடம்' என தலைப்பு வைத்துள்ளனர். இது விஷாலின் 35வது படமாக உருவாகிறது. ‛ஈட்டி' பட இயக்குனர் ரவி அரசு இந்த படத்தை இயக்குகிறார்.
இதில் கதாநாயகியாக துஷாரா விஜயன் நடிக்கிறார் மற்றும் அஞ்சலி, யோகி பாபு ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார்.
ஏற்கனவே இந்த படத்திலிருந்து டைட்டில் க்ளிம்ஸ் வெளியானதைத் தொடர்ந்து இன்று விநாயகர் சதுர்த்தி தினத்தை முன்னிட்டு மகுடம் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். இந்த பர்ஸ்ட் லுக் போஸ்டரின் மூலம் விஷால் இந்த படத்தில் மூன்று தோற்றங்களில் தோன்றுகிறார் என்பது உறுதியாகியுள்ளது.




