அதை மட்டும் சொல்லாதீங்க : இந்திரா படக்குழு | டைரக்டர் ஆகிறாரா விஜய் சேதுபதி மகன்? | ரசிகர்கள் கிண்டல் : மன்னிப்பு கேட்ட 'வார் 2' வினியோகஸ்தர் | 'லியோ' மொத்த வசூல் 220 கோடி மட்டும் தானா? | செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு |
பாலிவுட் படங்களில் வில்லனாக நடித்து பிரபலமானவர் நடிகர் நவாசுதீன் சித்திக். இவர் தமிழில் ரஜினிகாந்தின் 'பேட்ட' படத்திலும் வில்லனாக நடித்து இருந்தார். இவருக்கும், மனைவி ஆலியா என்பவருக்கும் 2 குழந்தைகள் உள்ள நிலையில், கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்தனர். நவாசுதீன் தன்னை அடித்து துன்புறுத்தியதாக ஆலியாவும், தன்னிடம் பணம் பறிக்க முயற்சிப்பதாக நவாசுதீனும் மாறி மாறி புகார் அளித்திருந்தனர். இது பாலிவுட் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.
பின்னர் கடந்த மார்ச் மாதம் நவாசுதீன் சித்திக் மற்றும் மனைவி ஆலியா இருவரும் மனக்கசப்புகளை மறந்து 'குழந்தைகளுக்காக ஒன்றாக இணைந்திருக்கிறோம்' என ஒன்றாக இணைந்தனர். இந்தநிலையில் நவாசுதீன் சர்ச்சை கருத்தை தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், ‛‛திருமணத்திற்கு பிறகு தம்பதிகளிடையே காதல் நின்றுவிடும். திருமணத்திற்கு பிறகு இருவரிடையே இருக்கும் நேசம் குறைய தொடங்குகிறது. எதிர்பாராத விதமாக நிறைய விஷயங்கள் நடக்கின்றன. எனவே நீங்கள் யாரையாவது காதலித்தாலோ, தொடர்ந்து காதலிக்க விரும்பினாலோ திருமணம் செய்து கொள்ளாதீர்கள்'' என்றார்.
நவாசுதீனின் இந்த கருத்தால், மீண்டும் இருவருக்குள்ளும் பிரச்னை வெடித்ததாக தகவல் பரவுகிறது.