2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

பிரபல பாலிவுட் நடிகை ஹினா கான். தொலைக்காட்சி தொடர்களில் நடித்ததன் மூலம் புகழ்பெற்றார். குறிப்பாக 'நாகினி' தொடரில் நடித்து எல்லா மொழிக்கும் அறிந்த நடிகை ஆனார். இந்த தொடர் தமிழில் வெளிவந்து இங்கும் அறிமுகமானார்.
இந்த நிலையில் தனக்கு புற்று நோய் பாதிப்பு ஏற்பட்டிருப்பதாக தனது இன்ஸ்ட்ராகிராமில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் “எனக்கு மூன்றாம் நிலை மார்பகப் புற்றுநோய் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. நான் வலிமையானவள், உறுதியானவள், இந்த நோயை வெல்வேன் என்று நம்புகிறேன்.
சிகிச்சை தொடங்கிவிட்டது. தயவு செய்து எனது தனியுரிமைக்கு மதிப்பளிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன். இந்த கடினமான பயணத்தில் உங்கள் தனிப்பட்ட அனுபவங்கள், ஆதரவான பரிந்துரைகள் எனக்கு உதவும் . உங்கள் பிரார்த்தனைகள், ஆசிகள் தேவை” என்று பதிவிட்டுள்ளார்.