ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி | 'கஜினி'யும், 'துப்பாக்கி'யும் கலந்தது 'மதராஸி' : ஏ.ஆர்.முருகதாஸ் | தயாரிப்பாளர் சங்கத் தலைரை கைது செய்து ஆஜர்படுத்த கோர்ட் உத்தரவு | பழம்பெரும் நடன இயக்குனர் ஓமணா காலமானர் | பிளாஷ்பேக்: கடும் விமர்சனத்தை சந்தித்த 'கன்னி ராசி' கிளைமாக்ஸ் | பிளாஷ்பேக்: 250 படங்களில் நடித்த இந்திரா தேவி |
மலையாள திரையுலகில் கடந்த சில வருடங்களாகவே ரசிகர்களின் கவனத்தை தொடர்ந்து ஈர்த்து வருபவர் நடிகர் டொவினோ தாமஸ். மலையாள ரசிகர்களை மட்டுமல்ல தமிழ் ரசிகர்களிடமும் இவர் வரவேற்பை பெற்றுள்ளார். காரணம் இவர் தேர்ந்தெடுக்கும் கதைகளும் கதாபாத்திரமும் படத்திற்கு படம் வித்தியாசமாக இருப்பது தான். குறிப்பாக கடந்த இரண்டு வருடங்களுக்கும் முன்பு சூப்பர்மேன் கதை அம்சத்தில் மலையாளத்தில் வெளியான மின்னல் முரளி என்கிற படம் இவருக்கு அதிகமான ரசிகர்களை பெற்றுத் தந்தது.
பஷில் ஜோசப் என்பவர் இயக்கி இருந்த இந்தப் படத்தில் இன்னொரு சூப்பர் மேனாக நடிகர் குரு சோமசுந்தரம் நடித்திருந்தார். இந்த நிலையில் ஆனந்த் டிவி என்கிற மலையாள சேனல் 2021க்கான விருது வழங்கும் விழாவை நடத்தியது. இதில் மின்னல் முரளி படத்தில் சிறந்த நடிப்பை வெளிப்படுத்தியதற்காக சிறந்த நடிகராக தேர்வு செய்யப்பட்டார் டொவினோ தாமஸ்.
இந்த விருது வழங்கும் நிகழ்வில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட நடிகர் மம்முட்டியிடம் இருந்து சிறந்த நடிகருக்கான விருதை பெற்றுக் கொண்டார் டொவினோ தாமஸ். இந்த நிகழ்வில் டொவினோ தாமஸ் குறித்து வெகுவாக பாராட்டி பேசினார் மம்முட்டி. இதனால் நிகழ்ந்துபோன டொவினோ, “வாழ்க்கை தான் எவ்வளவு விசித்திரமானது. மம்முட்டியிடமிருந்து விருது, வாழ்த்துக்கள் மற்றும் பாராட்டுகளை பெற்றது ஒரு மறக்க முடியாத தருணமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.