'ஜனநாயகன்' டிரைலர் : எதிர்பார்ப்புகள் என்ன ? | தமிழில் முதல் வெற்றியைப் பெறுவாரா பூஜா ஹெக்டே ? | இன்று ஒரே நாளில் மூன்று முக்கிய வெளியீடுகள் | சிவகார்த்திகேயனுக்கு கண்டனம் தெரிவித்த சிவாஜி சமூக நலப்பேரவை | பொங்கல் போட்டியில் முக்கிய கதாநாயகிகள் | முன்பதிவில் ஜனநாயகன் செய்த சாதனை | 300வது படத்தை எட்டிய யோகி பாபு | மீண்டும் ரசிகர்களை ஏமாற்றிய கருப்பு | 75 கோடி வசூலை கடந்த சர்வம் மாயா | ஜனநாயகன் ரீமேக் படமா ? பகவத் கேசரி இயக்குனர் பதில் |

மெய்யழகன் படத்தை அடுத்து டாணாக்காரன் படத்தை இயக்கிய தமிழ் இயக்கும் படத்தில் தற்போது நடித்து வருகிறார் கார்த்தி. இது தவிர வாத்தியார் மற்றும் சர்தார் 2 படத்திலும் நடிக்கும் கார்த்தி, லோகேஷ் கனகராஜ் இயக்கும் கைதி 2 படத்திலும் அடுத்து நடிக்கப் போகிறார். இந்த நேரத்தில் மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் தொடரும்(துடரும்) என்ற படத்தை இயக்கிய தருண் மூர்த்தி இயக்கும் படத்திலும் அடுத்து கார்த்தி கமிட்டாகி இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியிருக்கிறது.
தொடரும் படம் பாக்ஸ் ஆபிஸில் 200 கோடி ரூபாய் வசூலித்த நிலையில், கார்த்தி நடிப்பில் தருண் மூர்த்தி இயக்கும் படமும் குடும்ப பிரச்சினை மையமாகக் கொண்ட கதையில்தான் உருவாகிறதாம். மேலும் கார்த்தியின் அண்ணனான சூர்யாவும் மலையாளத்தில் பஹத் பாசில் நடிப்பில் ஆவேஷம் என்ற படத்தை இயக்கிய ஜீத்து மாதவன் இயக்கும் படத்தில் நடிக்க கமிட்டாகி இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.