வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
மலையாள திரையுலக நடிகர் சங்கம் 'அம்மா' என்கிற பெயரில் இயங்கி வருகிறது. இதன் தலைவராக மோகன்லால் பொறுப்பு வகித்தார். கடந்த வருடம் நீதிபதி ஹேமா கமிஷன் அறிக்கை ஏற்படுத்திய தாக்கம் காரணமாக நடிகர் சங்கத்தில் இருந்த பல நிர்வாகிகள் மீது பாலியல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. சிலர் கைது செய்யப்பட்டனர். இதற்கு தார்மீக பொறுப்பேற்று நடிகர் மோகன்லால் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். மேலும் பல நிர்வாகிகள் ராஜினாமா செய்தனர்.. ஆனால் பலமுறை பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான வில்லன் நடிகரான பாபுராஜ் தனது பொறுப்பை ராஜினமா செய்யவில்லை.. மோகன்லால் சொல்லியும் அவர் கேட்கவில்லை என்பதால் தான் மோகன்லால் விலகினார் என்றும் பாபுராஜ் மீது குற்றம் சாட்டப்பட்டது.
அது மட்டுமல்ல தற்போது விரைவில் நடைபெற இருக்கும் நடிகர் சங்க தேர்தலில் பொதுச் செயலாளர் பதவிக்கு மீண்டும் நடிகர் பாபுராஜ் போட்டியிட விண்ணப்பித்தும் இருந்தார். இந்த நிலையில் தான், அவர் போட்டியிடுவதில் இருந்து வாபஸ் பெறுகிறேன் என்றும் நடிகர் சங்கத்தில் இனி எந்த பொறுப்புகளிலும் கலந்து கொள்ளப் போவதில்லை என்றும் ஒரு கடிதம் ஒன்றை தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ளார்..
இது குறித்து நடிகர் பாபுராஜ் கூறும்போது, “கடந்த எட்டு வருடங்களாக நடிகர் சங்கத்தின் செயல்பாடுகளில் தீவிரமாக செயல்பட்டு வருகிறேன். ஆனால் எனக்கு கிடைத்ததெல்லாம் அவதூறுகளும், பாலியல் குற்றச்சாட்டுகள் மட்டுமே. நடிகர் மோகன்லால் விலகியபோது நானும் விலகுவதற்கு தான் முடிவு எடுத்தேன். ஆனால் பல உறுப்பினர்கள் என்னை விலக வேண்டாம் என்று கேட்டுக் கொண்டதால் விலகவில்லை. ஆனால் இப்போது என்னால் தான் மோகன்லால் ராஜினாமா செய்தார் என்பது போல செய்திகளை திரித்து வெளியிடுகிறார்கள். அதனால் நான் இனி நடிகர் சங்கத்தின் எந்த செயல்பாடுகளிலும் கலந்து கொள்ளப் போவதில்லை. எந்த ஒரு பொறுப்புக்கும் போட்டியிடப் போவதில்லை. அதனால் என்னுடைய வேட்பு மனுவை வாபஸ் பெறுகிறேன். இதை யாருக்கும் பயந்து நான் செய்யவில்லை” என்று கூறியுள்ளார்.