சினிமாவிற்கு மொழி கிடையாது, தமிழிலும் நடிக்க ஆசைப்படும் பாக்யஸ்ரீ போர்ஸ் | சட்டப்படி பிரிந்தனர் : ஜிவி பிரகாஷ், சைந்தவிக்கு விவாகரத்து வழங்கியது நீதிமன்றம் | ஓவியா எங்கே? ஓவியாவுக்கு என்னாச்சு? | பிரபாஸ் படத்தில் இணையும் பிரேமம் பட நாயகி | இட்லி கடை, காந்தாரா 2 ஜெயிப்பது யார்? | இறுதிகட்ட படப்பிடிப்பில் பராசக்தி | கைவிடப்பட்ட சுந்தர்.சி, கார்த்தி படம் | ஒரே படத்தில் 3 ஹீரோயின்கள் | தேவயானி அடித்தால் எப்படி இருக்கும் தெரியுமா? : ராஜகுமாரன் சொன்ன அதிர்ச்சி தகவல் | நான் நடிகர் ஆன கதை : ரஞ்சித் சொன்ன பிளாஷ்பேக் |
பழம்பெரும் நடன இயக்குனர் ஆண்டனி. எம்.ஜி.ஆர்., சிவாஜி, ரஜினி, கமல்ஹாசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களின் படங்களுக்கு நடன இயக்குனராக பணியாற்றியவர். இவரது மனைவி ஓமணாவும் முன்னணி நடன கலைஞராக திகழ்ந்தார். சில படங்களுக்கு நடன இயக்குனராகவும் பணியாற்றி உள்ளார். இவரது மகன்தான் சமீபத்தில் வெளியான 'மிசஸ் அண்ட் மிஸ்டர்' படத்தில் வனிதாவுடன் நடித்த ராபர்ட்.
ஓமணா சென்னை வளசரவாக்கத்தில் குடும்பத்தினருடன் வசித்து வந்தார். 74 வயதான ஓமணா முதுமை காரணமாக பல்வேறு உடல்நல பிரச்சினைகளால் அவதிப்பட்டு வந்தார். இந்த நிலையில் நேற்று அவர் மரணம் அடைந்தார். ஓமணாவுக்கு ராபர்ட் தவிர, ஷோபனா, அல்போன்சா என்ற மகள்களும், பிரதீப், மனோஜ், என்ற மகன்களும் உள்ளனர். இவர்கள் அனைவருமே நடன கலைஞர்களாக சினிமாவில் பணியாற்றி வருகிறார்கள்.