ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் | நிவேதா பெத்துராஜுக்கு திருமணம் | 'திரெளபதி' இரண்டாம் பாகத்தில் சரித்திர கதை | பிளாஷ்பேக் : காமெடி நாயகனாக விஜயகாந்த் நடித்த படம் | சிரிப்பு சத்தம், காமெடி பஞ்சத்தில் தவிக்கும் தமிழ் சினிமா | பிளாஷ்பேக் : உலகம் முழுக்க வெற்றி பெற்று தமிழில் தோற்ற கதை | ‛பெத்தி' பட பாடலுக்கு ஆயிரம் பேருடன் நடனமாடிய ராம்சரண் | தீபாவளி போட்டியில் டீசல் : ஆக்ஷன் ஹீரோவாக ஹரிஷ் கல்யாண் |
மலையாளத்தில் மோகன்லால் நடிப்பில் வரும் அக்டோபர் 21ம் தேதி தீபாவளி வெளியீடாக ரிலீசாகவிருக்கும் படம் 'மான்ஸ்டர்'. கடந்த 2016ல் மோகன்லாலை வைத்து புலிமுருகன் என்கிற சூப்பர்ஹிட் படத்தை இயக்கிய இயக்குனர் வைசாக் மீண்டும் அவருடன் கூட்டணி சேர்ந்துள்ள படம் இது என்பதால் படத்திற்கான எதிர்பார்ப்பு மிகவும் அதிகமாக இருக்கிறது.
இந்த படத்திற்கான முன்பதிவு ஆரம்பித்துள்ள நிலையில் இந்த படம் அரபு நாடுகளில் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ளதாக தற்போது ஒரு தகவல் வெளியாகி உள்ளது. அதற்கு காரணம் இந்தப்படத்தில் ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்த விஷயம் படத்தில் மையமாக இடம் பெற்றுள்ளது என்றும் இதுபோன்ற விஷயங்களை கொண்ட படங்களுக்கு அரபு நாடுகளில் வெளியிட தடை இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.
மோகன்லால் ஒரு பேட்டியில் கூறும்போது கூட மலையாள சினிமாவில் இது ஒரு துணிச்சலான முதல் முயற்சி என்று சொல்லலாம் என படம் குறித்து சூசகமான ஒரு தகவலை கூறியிருந்தார். ஒருவேளை அவர் இதுபற்றித்தான் குறிப்பிட்டிருப்பார் போலும். தற்போது அரபு நாடுகளில் இந்த படம் வெளியிட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் ஏற்கனவே முன்பதிவு செய்யப்பட்ட காட்சிகளை நிவின்பாலி நடிப்பில் அதே தேதியில் வெளியாக இருக்கும் படவேட்டு படத்திற்காக திரையரங்குகள் ஒதுக்கியுள்ளதாக இன்னொரு தகவலும் வெளியாகியுள்ளது.
இருந்தாலும் தயாரிப்பாளர் தரப்பில் இருந்து மறு சென்சார் செய்து படத்தை வெளியிடுவதற்கான முயற்சிகள் எடுக்கப்பட்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது.