175ஐத் தொட்டது 2023ல் வெளியான தமிழ்ப் படங்கள் | விடாமுயற்சி - அஜர்பைஜான் புறப்படும் அஜித் | தனது நிறுவனத்திற்கு ஓகே, சினிமாக்கு நோ : நயன்தாரா பாலிசி | 'முனி 4' போல அடுத்து 'அரண்மனை 4' | ‛அப்பா' படம் வரி விலக்கிற்கு லஞ்சம் கொடுத்தேன் - சமுத்திரகனி | துருவ நட்சத்திரம் படத்திற்கு 11 இடங்களில் கட் | ராஜா ராணி டூ ஜவான் : ப்ரியா அட்லியின் நெகிழ்ச்சி பதிவு | டைகர் ஷெராப் படத்தின் தமிழ் டீசரை வெளியிட்ட த்ரிஷா | புடவை கட்டினாலும் சாந்தினி ஹாட் தான் | வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் சமீரா ஷெரீப் : கம்பேக் எப்போது? |
மோகன்லால் நடிப்பில் பிரபல இயக்குனர் ஷாஜி கைலாஷ் இயக்கியுள்ள படம் அலோன். கிட்டத்தட்ட 12 வருடங்களுக்கு பிறகு இவர்கள் இருவரும் கூட்டணி சேர்ந்துள்ள படம் இது.. வழக்கம்போல கமர்ஷியல் ஆக்சன் படமாகவே உருவாகியுள்ள இந்தப்படத்தின் படப்பிடிப்பை கடந்த அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் துவங்கி வெறும் 18 நாட்களிலேயே மொத்த படப்பிடிப்பையும் நடத்தி முடித்தார் இயக்குனர் ஷாஜி கைலாஷ்.
ஆனால் படப்பிடிப்பு முடிவடைந்து கிட்டத்தட்ட ஆறு மாதம் கழிந்த நிலையில் தற்போது தான் மோகன்லால் இந்த படத்திற்காக டப்பிங் பேச துவங்கியுள்ளார். இதற்கு முன்னதாக வெளியான ப்ரோ டாடி, ஆராட்டு, விரைவில் வெளியாக உள்ள ட்வல்த் மேன் என தான் நடித்து வந்த படங்களின் வேலைகளிலும் இன்னொரு பக்கம் தான் இயக்கிவரும் பாரோஸ் என்கிற படத்தின் வேலைகளிலும் மோகன்லால் மும்முரமாக இருந்ததால் இந்த படத்தின் டப்பிங் தள்ளிப் போய்க்கொண்டே இருந்தது.
வரும் வெள்ளியன்று ஜீத்து ஜோசப் டைரக்சனில் மோகன்லால் நடித்துள்ள ட்வல்த் மேன் படம் ரிலீஸாக உள்ள நிலையில், அதற்கு அடுத்த வெளியீடாக இந்த அலோன் இருக்கும் என்பதால் தற்போது டப்பிங் பணிகளை துவங்கியுள்ளார் மோகன்லால்.