ஜான்சி ராணி ரோலில் மாஸ் என்ட்ரி கொடுக்கும் ரச்சிதா | திவ்யா கிருஷ்ணனுக்கு சல்யூட் அடிக்கும் ரசிகர்கள் | டுவிட்டரில் நுழைந்த விக்ரம் | விஜய் ஆண்டனியின் ஒரு படத்தைக் கூடப் பார்க்காத மிஷ்கின் | சமந்தாவின் ‛யசோதா' ரிலீஸ் எப்போது | லட்சுமி ராமகிருஷ்ணன் படத்திற்கு இளையராஜா இசை | அடுத்த ஹனிமூன் டிரிப்பா ; ரசிகர்கள் கேள்வி | தமிழ், தெலுங்கில் ரீமேக்காகும் ஆலியா பட்டின் டார்லிங்ஸ் | வெந்து தணிந்தது காடு 2வது பாடல் ஆக.,14ல் வெளியாகிறது | அஜித்தின் 61வது படம் வல்லமை : நாளை போஸ்டர் வெளியாகிறது? |
நடிகை சாய்பல்லவி தான் நடிக்கும் படங்கள் மட்டுமின்றி மற்ற நடிகர்களின் படங்களையும் தியேட்டருக்கு சென்று ரசிகர்களோடு ரசிகராக படம் பார்ப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார். தெலுங்கில் மகேஷ்பாபு, கீர்த்தி சுரேஷ் நடிப்பில் வெளியாகியுள்ள சர்க்காரு வாரி பாட்டா என்ற படத்தை தியேட்டருக்கு சென்று பார்த்து ரசித்துள்ளார் சாய்பல்லவி. ஆனால் அப்படி செல்லும்போது ரசிகர்கள் தன்னை அடையாளம் கண்டு கொள்ளக் கூடாது என்பதற்காக மாஸ்க் அணிந்தபடி தனது தலையில் ஒரு துணியை போட்டு முகத்தை மறைத்தபடி தியேட்டருக்குள் சென்ற சாய்பல்லவி திரும்பி வரும்போதும் முகத்தை மறைத்தபடியே ரசிகர்களின் கண்ணில் சிக்காமல் வெளியே வருகிறார். அதுகுறித்த வீடியோ ஒன்று சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. மேலும் தெலுங்கில் ராணாவுடன் இணைந்து நடித்துள்ள விராட பருவம் மற்றும் தமிழில் நடித்துள்ள கார்கி ஆகிய படங்களை தொடர்ந்து தற்போது கமலின் ராஜ்கமல் பிலிம்ஸ் தயாரிக்கும் படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிக்க கமிட் ஆகி இருக்கிறார் சாய்பல்லவி.