காதலர் தினத்தில் வெளியாகும் மம்முட்டியின் ஆக்ஷன் படம் | ஷங்கர் படங்களை 'பிளாக்'கில் டிக்கெட் வாங்கி பார்த்தேன் - பவன் கல்யாண் | ஆசைமுகம், வாலி, லவ் டுடே : ஞாயிறு திரைப்படங்கள் | இந்தியன் 3 பிரச்னையை கேம் சேஞ்சருக்குள் கொண்டு வருவதா? - தில்ராஜு ஆவேசம் | ஜான்வி கபூரிடம் ஸ்ரீதேவியை பார்க்க முடியவில்லை : ராம் கோபால் வர்மா | ராஜமவுலி - மகேஷ்பாபு படம் ரிலீஸ் எப்போது? - ராம்சரண் ஆருடம் | கேரளா திரும்பியதுமே எம்.டி வாசுதேவன் நாயர் இல்லத்திற்கு சென்று ஆறுதல் கூறிய மம்முட்டி | இயக்குனர் ஷங்கர் தான் எனது இன்ஸ்பிரேஷன் : ராஜமவுலி | ஒரே நாளில் மோதிக்கொள்ளும் அஜித் - தனுஷ் படங்கள் | மகாநடி படத்தில் முதலில் நடிக்க மறுத்தது ஏன்? - மனம் திறந்த கீர்த்தி சுரேஷ் |
கொரோனா இரண்டாவது அலையின் தாக்கம் ஓரளவுக்கு குறைந்துள்ள நிலையில் கடந்த ஒரு மாதமாக திரையரங்குகள் திறக்கப்பட்டு படங்கள் வெளியாகி வருகின்றன. ஆனாலும் கூட 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மிகப்பெரிய படம் ஏதாவது வெளியாகி ரசிகர்களை வழக்கம்போல தியேட்டருக்கு வரவழைக்கும் என பலரும் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.
பாலிவுட்டில் அக்சய் குமார் நடிப்பில் வெளியான பெல்பாட்டம் படத்திற்கும் இதே நிலைதான். இந்த நிலையில் தெலுங்கில் நாக சைதன்யா சாய்பல்லவி இணைந்து நடித்துள்ள லவ் ஸ்டோரி திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியானது. ஆச்சரியத்திலும் ஆச்சரியமாக முதல்நாளிலேயே 11.1 கோடி வசூல் செய்து புதிய சாதனை படைத்துள்ளது லவ் ஸ்டோரி திரைப்படம். இதில் இன்னொரு ஆச்சரியம் என்னவென்றால் அக்சய்குமாரின் பெல்பாட்டம் படம் கூட முதல்நாளில் 3.55 கோடி மட்டுமே வசூலித்து இருந்தது. அதேசமயம் கடந்த வாரம் வெளியான கோபிசந்த் தமன்னா நடித்த சீட்டிமார் திரைப்படம் ஒரே நாளில் 5 கோடி வசூல் செய்ததும் இங்கே குறிப்பிடத்தக்கது.