அடுத்தாண்டு ஏப்., 10ல் ‛இட்லி கடை' ரிலீஸ் | கங்கை நதி கரையில் நடந்த ரம்யா பாண்டியன் திருமணம் : யோகா மாஸ்டர் லோவலை மணந்தார் | 5 முறை தற்கொலை முயற்சி? - கண்கலங்க வைத்த சத்யா | சுந்தரி சீரியலில் ரீ-என்ட்ரி கொடுக்கும் ஸ்ரீகோபிகா | குழந்தைக்கு 'நிலா' என பெயர் சூட்டிய ரித்திகா | குட் நியூஸ் சொன்ன நிவேதிதா - சுரேந்தர் | ஓடிடியில் வந்தது 'வேட்டையன்': தாமதமாகும் 'லால் சலாம்' ஓடிடி ரிலீஸ் | 50வது நாளில் 'லப்பர் பந்து' | தமிழகத்தில் 100 கோடி வசூலித்த 'அமரன்' | 'பான் இந்தியா', சூர்யாதான் இன்ஸ்பிரேஷன் - ராஜமவுலி பேச்சு |
சென்னை : நாக சைதன்யாவுடனான விவாகரத்து குறித்து கருத்து தெரிவித்த காங்கிரஸ் பெண் அமைச்சர் கொண்டா சுரேகாவின் பேச்சுக்கு, நடிகை சமந்தா, நடிகர் நாகசைதன்யா ஆகியோர் காட்டமாக பதிலளித்துள்ளனர். தொடர்ந்து திரையுலகினர் பலரும் கண்டம் தெரிவிக்க கொண்டா சுரேகா வருத்தம் தெரிவித்தார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் சமந்தா, தற்போது ஹிந்தி மொழி படங்களிலும் நடித்து வருகிறார். சினிமாவில் தன்னுடன் இணைந்து நடித்த தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து, கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். பின்னர், இருவரிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக 2021ல் விவாகரத்து பெற்றனர்.
இந்த விவகாரத்துக்கான காரணம் குறித்து சமந்தா, நாக சைதன்யா எந்தக் கருத்தும் தெரிவிக்காமல் இருந்து வந்தனர். இதனிடையே, நாக சைதன்யா, சக நடிகை சோபிதா துலிபாலாவை 2வது திருமணம் செய்து கொள்ள நிச்சயதார்த்தம் செய்து கொண்டார்.
இதனிடையே, சமந்தா - நாக சைதன்யா விவாகரத்துக்கு முன்னாள் அமைச்சர் கே.டி.ராமராவ் தான் காரணம் என்று தெலுங்கானா காங்கிரஸ் அமைச்சர் கொண்டா சுரேகா பகீர் குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். அதுமட்டுமில்லாமல், கே.டி.ராமராவால், சமந்தாவைப் போல பல பெண்கள் திருமணம் செய்து கொண்டு, திரையுலகை விட்டே சென்று விட்டதாகவும் குண்டை தூக்கிப் போட்டார்.
அமைச்சரின் இந்தக் கருத்துக்கு நடிகரும், சமந்தாவின் முன்னாள் மாமனாருமான நாகார்ஜூனா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதேவேளையில், தன் மீது அவதூறு கருத்து பரப்பும் விதமாக, அமைச்சர் சுரேகா கருத்து தெரிவித்திருப்பதாகவும், அதனை உடனே திரும்பப் பெறவில்லை என்றால், சட்டப்படி வழக்கு தொடர்வேன் என்று முன்னாள் அமைச்சர் கே.டி. ராமராவும் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
சமந்தா கோபம்
இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக சமந்தா கடும் கோபத்துடன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியதாவது: திரைத்துறையில் பல சிரமங்களை கடந்து ஒரு பெண்ணாக போராடிக் கொண்டிருக்கிறேன். அமைச்சர் கொண்டா சுரேகாவின் கருத்துக்கு நான் கடும் கண்டனத்தை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னுடைய விவாகரத்து பரஸ்பரமானது. தயவு செய்து மற்றவர்களின் தனி உரிமையை மதிக்கவும். பொறுப்பான பதவியில் இருக்கும் ஒரு பெண்ணாக, எங்கள் குடும்பத்திற்கு எதிரான உங்கள் கருத்துக்கள் முற்றிலும் பொருத்தமற்றவை, தவறானவை. உங்கள் கருத்துக்களை உடனே திரும்பப் பெற வேண்டும். உங்களின் அரசியல் சண்டையில் என் பெயரை இழுக்க வேண்டாம். அரசியலுக்கு அப்பாற்பட்டே இருக்கிறேன். அப்படியே இருக்கவே நான் ஆசைப்படுகிறேன், எனக் குறிப்பிட்டுள்ளார்.
நாகசைதன்யாவும் கண்டனம்
நடிகர் நாகசைதன்யா வெளியிட்ட பதிவில், ‛‛மிகுந்த வலியுடன் அதேசமயம் நானும் என் முன்னாள் மனைவியும் ஒருவருக்கொருவர் புரிந்துணர்வுடன் தான் விவாகரத்து முடிவை எடுத்தோம். இது எங்களின் அமைதிக்காகவும் அவரவர் இலக்கை நோக்கி நகர்வதற்காகவும் எடுக்கப்பட்ட முடிவு. இதுகுறித்து பொது வெளியில் ஆதாரமற்ற பல கிசுகிசுக்கள் நீண்ட நாட்களாகவே இருந்தாலும் என்னுடைய முன்னாள் மனைவியின் மீது நான் வைத்துள்ள மரியாதை கருதி இது எதற்குமே பதிலளிக்காமல் அமைதியாக இருந்தேன். ஆனால் இன்று அமைச்சர் எங்களது விவாகரத்து குறித்து இப்படி ஒரு தவறான கருத்தை வெளிப்படுத்தியுள்ளார். இது முற்றிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெண்கள் ஆதரவளிக்கப்பட வேண்டியவர்கள் மற்றும் மதிக்கப்பட வேண்டியவர்கள். பிரபலங்களின் சொந்த வாழ்க்கையை வெளிப்படுத்தும் விதமாக இப்படி தாங்களாகவே உரிமை எடுத்துக் கொண்டு தலைப்பு செய்திகளில் இடம்பிடிக்கப் பார்ப்பது வெட்கக்கேடானது” என்று கூறியுள்ளார்.
நாகார்ஜூனா கண்டனம்
இதுகுறித்து நடிகர் நாகார்ஜூனா வெளியிட்டுள்ள பதிவில், “நான் மதிப்பிற்குரிய அமைச்சர் கொண்டா சுரேஷின் கருத்துக்களை வன்மையாக கண்டிக்கிறேன். அரசியலில் இருந்து விலகி நிற்கும் திரையுலக நட்சத்திரங்களின் வாழ்க்கையை உங்களது எதிராளிகளை விமர்சிப்பதற்காக பயன்படுத்தாதீர்கள். ஒரு பொறுப்பான பதவியில் இருக்கும் பெண்ணான நீங்கள் எங்களது குடும்பத்திற்கு எதிராக வெளிப்படுத்தி இருக்கும் கருத்துக்கள் மற்றும் குற்றச்சாட்டுகள் தவறானவை மற்றும் பொருத்தமற்றவை. உங்களுடைய கருத்துக்களை உடனடியாக வாபஸ் பெறுமாறு கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
பெண் அமைச்சர் வருத்தம்
சமந்தா, நாகசைதன்யா என திரையுலகினர் பலரும் கண்டனம் தெரிவித்த நிலையில் பெண் அமைச்சர் கொண்டா சுரேகா வருத்தம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட பதிவில், ‛‛அரசியல் ஆதாயத்திற்காக யாருடைய குடும்ப பிரச்னையையும், தனிப்பட்ட வாழ்க்கை பற்றியும் பேசியது இல்லை. அடிப்படை ஆதாரமின்றி என்ற குற்றச்சாட்டையும் நான் முன் வைப்பதில்லை. சமந்தா மற்றும் அவரது குடும்பத்தை இழிவுப்படுத்தும் நோக்கம் அல்ல. எனது பேச்சு யார் மனதையும் புண்படுத்தி இருந்தால் அதற்காக வருத்தாம் தெரிவிக்கிறேன். சமந்தா தன்னம்பிக்கையுடன் வளர்ந்த விதம் குறித்து நான் அறிவேன்'' என குறிப்பிட்டுள்ளார்.