ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா | தர்மேந்திரா பிறந்தநாளில் ரசிகர்களின் பார்வைக்காக பண்ணை வீடு திறப்பு | தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் | கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார் | சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் | ரவி தேஜா,பிரியா பவானி சங்கர் படத்தின் தலைப்பு இருமுடி? |

மும்பை : மஹாராஷ்டிரா தொழிலதிபரிடம், 60 கோடி ரூபாய் வரை மோசடி செய்ததாக, ஹிந்தி நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரின் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
பிரபல ஹிந்தி நடிகையான ஷில்பா ஷெட்டி, தன் கணவர் ராஜ் குந்த்ராவுடன் மஹாராஷ்டிராவின் மும்பையில் வசித்து வருகிறார். இவர்கள் இருவரும், தன்னிடம் பெற்ற 60 கோடி ரூபாயை தராமல் மோசடி செய்ததாக மும்பை போலீசில் தொழிலதிபர் தீபக் கோத்தாரி, 60, என்பவர் புகாரளித்தார்.
டீல் 'டிவி' பிரைவேட் லிமிடெட்' நிறுவனத்துக்கு 60 கோடி ரூபாய் கடனாக வாங்கி விட்டு, பின்னர் அந்த நிறுவனம் மீது திவால் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக அவர் புகார் அளித்தார். மேலும், தன்னிடம் வாங்கிய 60 கோடி ரூபாயை, வேறு நிறுவனங்களில் ஷில்பா - ராஜ் தம்பதி முதலீடு செய்ததாகவும் அவர் குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து, ஷில்பா ஷெட்டி, அவர் கணவர் ராஜ் குந்த்ரா மீது, மும்பை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்த நிலையில், ஷில்பா ஷெட்டி, அவர் கணவர் ராஜ் குந்த்ராவுக்கு எதிராக லுக் அவுட் நோட்டீஸை போலீசார் பிறப்பித்துள்ளனர். இருவரும் அடிக்கடி வெளிநாட்டு பயணம் மேற்கொள்வதால், வழக்கின் விசாரணையை சுமூகமாக நடத்துவதற்கு உதவியாக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.