மகேஷ்பாபு ரவீணா டாண்டன் குடும்பத்தினரின் குறுக்கீடு எதுவும் இல்லை ; இயக்குனர் அஜய் பூபதி | ஹீரோ ஆனார் ராம்கோபால் வர்மா | தர்மேந்திரா பிறந்தநாளில் ரசிகர்களின் பார்வைக்காக பண்ணை வீடு திறப்பு | தாயின் கருவில் இருந்தபோதே கேட்ட ஸ்லோகம் அது : பாலகிருஷ்ணா தகவல் | கேரளாவில் பம்பாய் பட 30ம் ஆண்டு கொண்டாட்டம் : மணிரத்னம் கலந்து கொள்கிறார் | சமந்தாவுக்கு விலை உயர்ந்த திருமண பரிசு கொடுத்த ராஜ் நிடிமொரு | ‛கோழிப்பண்ணை செல்லத்துரை' நாயகனின் அடுத்த படம் ‛ஹைக்கூ' | அஜித்தின் கார் ரேஸை ஆவண படமாக்கும் ஏ.எல்.விஜய் | லண்டன் லெஸ்டர் சதுக்கத்தில் ஷாருக்கான், கஜோலுக்கு சிலை | ரஜினி படத்திற்கு இசையமைக்கும் சாய் அபயன்கர் |

பாலிவுட் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக வலம் வருகிறவர் மூன் தாஸ். பெங்காலி நடிகையான இவர் ஹிந்தி படங்களிலும் நடித்துள்ளார். மாடலிங் துறையிலும் பணியாற்றி வருகிறார். 41 வயதான மூன் தாஸின் இயற்பெயர் அனுஷ்கா மோனி மோகன்தாஸ். இவர் மும்பை அந்தேரி பகுதியில் உள்ள காஷிமிராவில் நடிகைகளை வைத்து பாலியல் தொழில் நடத்தி வருவதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனால் போலீசார் சிலர் வாடிக்கையாளர்கள் போல் நடித்து மூன் தாஸை பிடித்தனர்.
அவரிடம் நடத்திய விசாரணையில் 'ஹிந்தி, தெலுங்கு, தமிழில் நடித்து வரும் நடிகைகளை வைத்து விபச்சாரம் செய்வதை ஒப்புக் கொண்டார். சினிமாவில், தொலைக்காட்சியில் பார்த்து ரசிக்கும் நடிகைகளை இங்குள்ள செல்வந்தர்களுக்கு பிடித்துப்போனால் அவர்கள் என்னை தொடர்பு கொண்டு கேட்பார்கள். நானும் சம்பந்தப்பட்ட நடிகைகளுடன் தொடர்பு கொண்டு பேசுவேன், ஒரு இரவுக்கு பல லட்சம் கிடைப்பதால் அவர்களும் மும்பை வந்து செல்வார்கள்' என்று வாக்குமூலம் கொடுத்துள்ளார். இதைத் தொடர்ந்து போலீசார் மூன் தாஸை கைது செய்து சிறையில் அடைத்தனர்.