திருமணத்திற்கு பிறகு கவர்ச்சியாக நடிப்பதில் தவறில்லை : ரகுல் ப்ரீத் சிங் | சுமாரான வரவேற்பில் அனுஷ்காவின் 'காட்டி' | புகழ் படம் வந்ததே தெரியாது, பாலா படம் வந்தது தெரிகிறது…!! | மீசைய முறுக்கு 2 நடிக்க மறுத்தது ஏன்? : தேவா விளக்கம் | குறைந்த காட்சிகளுடன் 4வது வாரத்தில் 'கூலி' | அக்., 2ல் ஓடிடியில் வெளியாகும் ‛தி கேம்' வெப் தொடர் | நிவின்பாலிக்கு தமிழில் ரசிகர்கள் கிடைப்பார்களா? | சம்பளம் வாங்காமல் நடிப்பார் ஜி.வி.பிரகாஷ் | விஷால் திருமணத்துக்கு செல்வாரா மிஷ்கின் | எட்டு நாளில் 120 கோடி வசூலித்த லோகா சாப்டர் 1 சந்திரா |
தமிழ் சினிமாவின் சீனியர் கதாநாயகனாக ரஜினிகாந்த் உடல்நலக்குறைவு காரணமாக சில தினங்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ரத்த நாளத்தில் ஏற்பட்ட வீக்கம் காரணமாக அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு 'ஸ்டென்ட்' வைக்கப்பட்டுள்ளது. அவர் விரைவில் வீடு திரும்புவார் என்றும் தெரிகிறது.
இதனிடையே, அவர் சில மாதங்கள் ஓய்வெடுக்க வேண்டும் என மருத்துவர்கள் அறிவுறுத்தி உள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தகவல் பரவியுள்ளது. தற்போது அவர் நடித்து வரும் 'கூலி' படத்தின் படப்பிடிப்பில் மழைக் காட்சிகளில் நடித்த போது உடல்நலக் குறைவு ஏற்பட்டது என்றும் சொல்கிறார்கள்.
சண்டைக் காட்சிகளிலோ, நடனக் காட்சிகளிலோ அவர் நடிக்கக் கூடாது என்றும் ஆலோசனை சொல்லப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. 'கூலி' படம் முழுமையான ஆக்ஷன் படம் என்று சொல்லப்படுகிறது. ரஜினியின் உடல்நிலையைக் கருத்தில் கொண்டு அதற்கேற்றபடி அப்படியான காட்சிகளில் சில மாற்றங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.