ஒரே படம் ஓஹோ வாழ்க்கை... கன்னாபின்னான்னு இழுக்கப்படும் பெயர் : கவலையில் கயாடு லோஹர் | சினிமாவில் 60வது ஆண்டை தொட்ட வெண்ணிற ஆடை மூர்த்தி | ஜெயமோகன் படத்துக்கு இந்த நிலையா? | வில்லனாக மாறிய சேரன் | டான்ஸ் ஆட வெச்சிட்டாங்க : பிரபு நெகிழ்ச்சி | ஹரி ஹர வீரமல்லுவுக்காக 5 ஆண்டுகள் வேறு படங்களில் நடிக்காத நிதி அகர்வால் | பாலிவுட்டில் தடம் பதிப்பாரா ஜூனியர் என்டிஆர் | மோசடி வழக்கை சட்டப்படி சந்திப்பேன் : சாம் சி.எஸ் | பூமிகா ஆசை நிறைவேறுமா? | ஹீரோ இல்லாமல் நடந்த 'ஹரிஹர வீரமல்லு' பட விழா |
ஆந்திர மாநில துணை முதல்வரும் நடிகருமான பவன் கல்யாண் சமீபத்திய பேட்டி ஒன்றில் தமிழ் சினிமா பற்றியும் பேசியுள்ளார். அப்பேட்டியில் யோகி பாபு நாயகனாக நடித்த 'மண்டேலா' படம் பற்றியும், அதில் அவருடைய நடிப்பைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளார்.
பவன் கல்யாண் பேசிய அந்த வீடியோவைப் பகிர்ந்து, “ஆந்திர மாநில துணை முதல்வர் பவன் கல்யாண் சார், உங்களது மதிப்புமிக்க வார்த்தைகளுக்கும், என்னை ஊக்கப்படுத்தியதற்கும் நன்றி,” எனக் குறிப்பிட்டுள்ளார்.
மடோன் அஷ்வின் இயக்கிய 'மண்டேலா' படம் 68வது தேசிய விருதுகளில், சிறந்த அறிமுக இயக்குனர், சிறந்த திரைக்கதை ஆகியவற்றிற்கான விருதுகளை வென்றது குறிப்பிடத்தக்கது.
அப்பேட்டியில் மேலும், “லியோ, படத்தைப் பார்த்தேன். லோகேஷ் கனகராஜின் பிலிம் மேக்கிங் ஸ்டைல் எனக்குப் பிடித்தது,” என்றும் பேசியிருந்தார் பவன் கல்யாண்.