ராமாயணா டைட்டில் வீடியோ 9 நகரங்களில் வெளியாகிறது | நிவின் பாலி ஜோடியாக ப்ரீத்தி முகுந்தன் | 'எம்ஜிஆரின் பரிசுத்த நினைப்பே படத்தின் தலைப்பு'... “திருடாதே” | தெலுங்கில் லாபக் கணக்கை ஆரம்பித்த 'குபேரா' | சிம்பு - வெற்றிமாறன் படத்தின் அடுத்த அப்டேட் ? | தமிழ் இயக்குனர் ஷங்கரை மீண்டும் விமர்சிக்கும் தெலுங்கு சினிமா | பாலாஜி மோகன் இயக்கத்தில் அர்ஜூன் தாஸ் | வார் 2 : ஹிருத்திக் ரோஷன், ஜூனியர் என்டிஆர் இடையே நடன போட்டி? | போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் |
நடிகர் நாக சைதன்யா, நடிகை சமந்தா இருவரது விவாகரத்துக்குக் காரணம் தெலுங்கானாவின் முன்னாள் அமைச்சர் கேடிஆர் (முன்னாள் முதல்வர் சந்திரசேகர ராவ் மகன்) என, தெலுங்கானா மாநிலத்தின் காங்கிரஸ் பெண் அமைச்சரான கொன்ட சுரேகா நேற்று (அக்.,2) ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில் சர்ச்சைக்குரிய விதத்தில் பேசியிருந்தார்.
பல நடிகைகள் சீக்கிரம் திருமணம் செய்து கொண்டு திரையுலகை விட்டு விலகியதற்கு கேடிஆர் தான் காரணம் என்றும் மேலும் குற்றம் சாட்டினார். இந்த விவகாரம் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
பெண் அமைச்சர் சுரேகா அப்படி பேசிய சில மணி நேரங்களிலேயே சமந்தா, நாகசைதன்யா மற்றும் நாகார்ஜுனா, அமலா, அவர்களது மகன் அகில் என நாகசைதன்யா குடும்பத்தைச் சேர்ந்த அனைவருமே கடும் கண்டனத்தைத் தெரிவித்தனர். மேலும் சில தெலுங்கு சினிமா பிரபலங்களும் அவர்களது கண்டனங்களைப் பதிவு செய்தனர்.
திரையுலகினரது தனிப்பட்ட விவகாரத்தை அரசியலாக்கிப் பேசுவது தவறு என்றும் சுட்டிக்காட்டினர். மேலும் தெலுங்கானா காங்கிரஸ் முதல்வரும், காங்., எம்.பி., ராகுல் ஆகியோரும் உடனடியாக பெண் அமைச்சர் சுரேகா மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தி உள்ளனர்.