'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' | ஹாரர், திரில்லராக உருவாகும் 'தி பிளாக் பைபிள்' | பிளாஷ்பேக் : பாடல்களுக்காக உருவான படம் |
வெங்கட்பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள 'தி கோட்' படம் இன்று ஓடிடி தளத்தில் ஐந்து மொழிகளில் வெளியாகி உள்ளது. இப்படம் தியேட்டர்களில் வெளியான போது கிளைமாக்ஸ் காட்சிகளில் குழப்பம் உள்ளது என்ற விமர்சனம் எழுந்தது. எந்த விஜய் 'குளோன்' என்பது பலருக்கும் புரியவில்லை. அந்த விமர்சனங்களைத் தொடர்ந்து அதற்கு பதிலளித்த வெங்கட் பிரபு, ''சில காட்சிகளை நீளம் காரணமாக வெட்டி எறிந்துவிட்டோம். தியேட்டர்களில் 3 மணி நேரமாக வெளியான படம், ஓடிடி தளத்தில் வெளியாகும் போது 3 மணி நேரம் 40 நிமிடங்களாக வரும்'' என்று தெரிவித்திருந்திருந்தார். ஆனால், ஓடிடி தளத்தில் தியேட்டர்களில் வெளியான அதே 3 மணி நேரப் படம்தான் வெளியாகி உள்ளது.
இது குறித்து வெங்கட் பிரபு, “டைரக்டர்ஸ் கட்' வர வேண்டும் என்றால் 'லோட்டா விஎப்எக்ஸ்' நிறுவனத்திடமிருந்து முடிவுற்ற பிரதியைப் பெற வேண்டும். அவற்றை டெலிட்டட் காட்சிகளாகவோ அல்லது பிறகு ஓடிடி தளத்தில் சேர்க்கவோ இது குறித்து என்னுடைய தயாரிப்பு நிறுவனத்திடம் பேசுகிறேன். இப்போதைக்கு இந்தப் பதிப்பை என்ஜாய் செய்யுங்கள்,” என்று கூறியுள்ளார்.
வெங்கட் பிரபு முன்னர் குறிப்பிட்டது போல கூடுதலான அந்த 40 நிமிடக் காட்சிகளை விஎப்எக்ஸ் நிறுவனத்திடமிருந்து பெற தயாரிப்பு நிறுவனம்தான் முடிவு செய்ய வேண்டும். அதன் வேலை முடிந்ததா இல்லையா என்பதை தயாரிப்பு நிறுவனம்தான் சொல்ல வேண்டும். அதற்கு கூடுதல் செலவு ஆகும் என்றால் அதைத் தயாரிப்பு நிறுவனம் செய்யுமா என்பதும் கேள்விக்குரியது.
படம் வெளியான போது ரசிகர்களை சமாளித்த வெங்கட் பிரபு, இப்போது மீண்டும் ஒரு காரணத்தை சொல்லி சமாளிப்பது விஜய் ரசிகர்களை அதிருப்தி அடைய வைத்துள்ளது.