தோட்டா தரணிக்கு செவாலியே விருது | மீண்டும் ரஜினியை இயக்குவது போன்று கமலையும் இயக்குவீர்களா? சுந்தர்.சி கொடுத்த பதில் | நடிகர் அஜித் வீட்டிற்கு வெடிகுண்டு மிரட்டல் | ‛இன்று போய் நாளை வா' : கே.பாக்யராஜ் சொன்ன பிளாஷ்பேக் | ராஜமவுலி படத்தில் ஸ்ருதிஹாசன் பாடிய பாடல் வெளியீடு | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் ராதிகா ஆப்தே படம் | அனந்தா படத்தில் நடந்த அதிசயங்கள் : சத்யசாய்பாபா மகிமை சொன்ன சுரேஷ் கிருஷ்ணா | டப்பிங் பணிகளை துவங்கிய அபிஷன், அனஸ்வரா | தமிழகத்தில் வெளியாகும் ஆஸ்கர் பரிந்துரை படம் | அன்னை இல்லத்தில் இருந்து அடுத்து வாரிசு: ரஜினி ஆசி |

மலையாளத்தில் வெளியான ‛பிரேமலு' படம் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியிலும் பிரபலமானவர் நடிகை மமிதா பைஜூ. தமிழில் ‛ரெபல்' படத்தில் நடித்தார். தற்போது விஷ்ணு விஷால் உடன் ஒரு படத்தில் நடிக்க உள்ளார். இதுதவிர பல படங்களில் அவரை நடிக்க வைக்க பேசி வருகின்றனர். இந்நிலையில் ஜாக்பாட்டாக இப்போது விஜய் பட வாய்ப்பு அவருக்கு கிடைத்துள்ளது.
வினோத் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 69வது படத்தின் படப்பிடிப்பு இந்தவாரம் துவங்குகிறது. இதில் பாபி தியோல், பூஜா ஹெக்டே ஆகியோர் நடிப்பதாக அறிவிக்கப்பட்ட நிலையில் மூன்றாவதாக நடிகை மமிதா பைஜூ நடிப்பதை அறிவித்துள்ளனர். அனிருத் இசையமைக்கும் இந்த படம் அரசியல் கலந்த கமர்சியல் படமாக உருவாகிறது. பெங்களூரை சேர்ந்த கேவிஎன் நிறுவனம் தயாரிக்கிறது.




