Advertisement

சிறப்புச்செய்திகள்

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

அநியாயம் நடக்கும்போது போலீஸ் அதிகாரத்தை கையில் எடுப்பது தப்பில்ல - ரஜினியின் ‛வேட்டையன்' டிரைலர் வெளியீடு

02 அக், 2024 - 05:57 IST
எழுத்தின் அளவு:
Rajinikanth-Vetaiyaan-trailer-released

ஞானவேல் இயக்கத்தில் ரஜினி நடித்துள்ள படம் வேட்டையன். அவருடன் அமிதாப் பச்சன், ராணா, பஹத் பாசில், மஞ்சு வாரியர், துஷாரா விஜயன், ரித்திகா சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ளது. அடுத்தவாரம் அக்., 10ம் தேதி படம் வெளியாகிறது. ஏற்கனவே படத்தின் இருபாடல்கள் மற்றும் முன்னோட்டம் வெளியாகி வரவேற்பை பெற்றது.

இன்று(அக்., 2) காந்தி ஜெயந்தியை முன்னிட்டு படத்தின் டிரைலரை சில நிமிட தாமத்திற்கு பின் வெளியிட்டனர். பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என பல்வேறு ஊர்களில் நடக்கும் போராட்டங்களுடன் டிரைலர் துவங்கிறது. அதில் குற்றவாளிகளை என்கவுன்டர் செய்யனும் என்ற குரல் ஒலிக்கிறது. இந்த விவகாரத்தால் போலீஸிற்கு பெரும் பிரச்னை வர அதற்கு காரணமானவரை என்கவுன்டர் செய்யும் பொறுப்பு ரஜினிக்கு வருகிறது. இதன் பின்னணியில் நடக்கும் விஷயங்களாக இந்த டிரைலர் விவரிக்கிறது. 2.39 நிமிடம் ஓடக்கூடிய டிரைலர் ரஜினி அமைதியாக, அதேசமயம் ஹீரோயிசம் கலந்த விவேகமான போலீசாக நடித்துள்ளார். அமிதாப், ராணா, பஹத் பாசில் உள்ளிட்ட படத்தில் நடித்துள்ள மற்றவர்களும் டிரைலரில் ஆங்காங்கே வந்து போகின்றனர்.

‛‛தேவையில்லை, ஒருவாரம் ரொம்ப அதிகம் மூணே நாளில் டிபார்ட்மென்ட்டிற்கு நல்ல பெயர் வரும். குற்றங்கள் தொற்று நோய் மாதிரி அதை வளர விடக்கூடாது. அநியாயம் நடக்கும்போது போலீஸ் அமைதியாக இருப்பதை விட அதிகாரத்தை கையில் எடுப்பது தப்பில்ல. நீங்க என்னை எந்த போஸ்டுக்கு தூக்கி அடிச்சாலும் நான் அதே போலீஸ்காரன் தான். என்கிட்ட இருந்து அவனை யாராலும் காப்பாத்த முடியாது'' போன்ற ரஜினி பேசும் பஞ்ச் வசனங்கள் மற்றும் அவரின் அலட்டல் இல்லாத ஆக்ஷன் காட்சிகள் கவனம் ஈர்த்துள்ளன.

வேட்டையன் படம் உலகம் முழுக்க அக்., 10ல் வெளியாகிறது. வேட்டையன் வசூல் வேட்டையை தருவாரா என்பது அடுத்தவாரம் தெரிந்துவிடும்.

Advertisement
கருத்துகள் (2) கருத்தைப் பதிவு செய்ய
நானிக்கு ஜோடியாக கே.ஜி.எப் பட நடிகைநானிக்கு ஜோடியாக கே.ஜி.எப் பட நடிகை விஜய் 69ல் இணைந்த மமிதா பைஜூ விஜய் 69ல் இணைந்த மமிதா பைஜூ

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து (2)

KayD - Mississauga,கனடா
02 அக், 2024 - 10:10 Report Abuse
KayD இதுக்கு முன்னாடி இந்த மாதிரி கதை யாருமே படம் எடுகலை பாருங்க ..ரஜினி நீங்களே உங்கள் பழைய படம் பாருங்க நிறைய இருக்கும். நடத்துங்க நடத்துங்க இது உங்க தர்பார் ..நீங்க வச்சது தான் சர்க்கார் சட்டம். ஆடுங்க ஆடுங்க ஜானி பாடுங்க பாடுங்க பாஷா நடிங்க நடிங்க நல்லவனுக்கு நல்லவன..
Rate this:
angbu ganesh - chennai,இந்தியா
03 அக், 2024 - 09:10Report Abuse
angbu ganeshயாருடா நீங்க எல்லாம் எங்க இருந்துட்டா வரீங்க, அணில் ஒரு கேவலமான படத்தை எல்லாம் நானுரூ கோடி ஐநூறு கொடின்னு அல்லி விடறான் அதா எல்லாம் நீ ஏன்டா கேக்க மாட்டென்டன்ற கோட் ஒரு குப்பை அதுக்கு நானூறு ன்னு சொல்றன் ஏன்டா ஒரு நியாயம் வேணாம்டா...
Rate this:

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Mayan
    • மாயன்
    • நடிகர் : வினோத் மோகன்
    • நடிகை : பிந்து மாதவி
    • இயக்குனர் :ராஜேஷ் கண்ணா
    Tamil New Film Devadas
    • தேவதாஸ்
    • நடிகர் : உமாபதி
    • நடிகை : ஐரா ,மனிஷா யாதவ்
    • இயக்குனர் :மகேஷ்.ரா
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2024 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in