2025 கூகுள் சர்ச் : 3வது இடத்தில் 'கூலி' | வா வாத்தியார் படத்தின் டிரைலர் வெளியானது | மலேசியாவில் ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்த அஜித் | ஜனநாயகன் படத்தின் சாட்டிலைட் உரிமையை வாங்கிய ஜீ தமிழ் | டிசம்பர் 9 முதல் 'அரசன்' படப்பிடிப்பு : சிம்பு கொடுத்த தகவல் | ஜி.வி.பிரகாஷின் அடுத்த படம் ஹேப்பிராஜ் | கடந்த சில வாரங்களாக காற்று வாங்கும் தமிழ் சினிமா | புதுமுகங்களின் மாயபிம்பம் | மீண்டும் நாயகியாக நடிக்கும் ரக்சிதா | அவதார் புரமோசன் நிகழ்வில் அர்னால்ட் |

'அனிமல்' இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் பிரபாஸ் நடிக்க உள்ள படம் 'ஸ்பிரிட்'. இப்படத்திற்கான வேலைகள் பரபரப்பாக நடந்து வருகிறது. விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகும் எனத் தெரிகிறது.
பொதுவாக படப்பிடிப்பு நடந்து முடிந்து, காட்சிகளை எடிட் செய்த பிறகு தான் அதற்கு பின்னணி இசை அமைப்பார்கள். ஆனால், இந்தப் படத்தில் பின்னணி இசையை படப்பிடிப்புக்கு முன்பே உருவாக்கிவிட்டார்களாம். இயக்குனர் சந்தீப் சொன்ன காட்சிகளின் உணர்வில் அதற்கான பின்னணி இசையை உருவாக்கிக் கொடுத்திருக்கிறார் இசையமைப்பாளர் ஹர்ஷவர்தன் ரமேஷ்வர்.
பின்னணி இசைக்கேற்பட காட்சிகளின் தாக்கத்தை இன்னும் சிறப்பாக பதிவு செய்ய முடியும் என இயக்குனர் நம்புகிறாராம். அந்த உணர்வில் படம் பிடித்து, படத்தொகுப்பு செய்தால் அது படத்தின் தரத்தை இன்னும் உயர்த்தும் என்கிறாராம் சந்தீப். சினிமாவில் இதுவரையில் யாரும் இப்படி செய்ததில்லை. முதல் முறையாக ஒரு புதிய முயற்சியைக் கையாள உள்ளார் சந்தீப். அது அவருக்கு எப்படி கை கொடுக்கப் போகிறது என்பது படம் வந்த பின்புதான் தெரியும்.