‛சிங் கீதம்' படம் என் 40 ஆண்டு கனவு : இயக்குனர் சிங்கீதம் சீனிவாசராவ் | ரஜினி, சிம்பு, பிரதீப்... : 3 படங்கள் வைத்திருக்கும் அஷ்வத் மாரிமுத்து | நோவா படத்தில் ஆக் ஷனில் ரைசா வில்சன் | அடுத்து கொரோனா வந்தால் சென்னை காலி ; பொள்ளாச்சியில் செட்டில் ஆக ஆசை: விஜய் ஆண்டனி | சாய் பல்லவிக்கு எழுதப்பட்ட கதையில் நடித்த சமந்தா | ஆர்யா 40 : படப்பிடிப்பு நிறைவு | ஜூன் 12ல் 8 படங்கள் ரிலீஸ் | எவ்வளவு காலம் முடியுமா அவ்வளவு காலம் கார் ரேஸ் : அஜித் பேட்டி | 'கருப்பு' - இந்த வாரம் ஓடிடியில் ரிலீஸ் | ரூ.230 கோடி வசூலைக் கடந்த 'பெத்தி' |

டிவியிலிருந்து சினிமாவுக்கு வந்து வெற்றி பெறுபவர்கள் சிலர் மட்டுமே. விஜய் டிவியிலிருந்து வந்த சந்தானம், சிவகார்த்திகேயன் இருவரும் தமிழ் சினிமாவில் முக்கிய இடத்தைப் பிடித்துவிட்டனர். அதன்பின்னும் அங்கிருந்து சிலர் சினிமா பக்கம் வந்தார்கள். ஆனால், அவர்களால் இன்னும் பிரபலமடைய முடியவில்லை.
'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் பிரபலமானவர்கள் புகழ் மற்றும் பாலா. புகழ் இதற்கு முன்பு சில படங்களில் நடித்திருந்தாலும் 'அயோத்தி' படம் தான் அவரைப் பற்றிப் பேச வைத்தது. அதன் பிறகு அவர் நடித்த படங்கள் பேசப்படவில்லை. அவர் கதாநாயகனாக நடித்து கடந்த மாதம் வெளிவந்த 'மிஸ்டர் ஜு கீப்பர்' படம் வந்ததும் தெரியவில்லை, போனதும் தெரியவில்லை. அந்தப் படத்தின் வெளியீட்டிற்கு படக்குழு எந்தவிதமான புரமோஷனையும் செய்யாமல் போனதே அதற்குக் காரணம். புகழின் கதாநாயகன் கனவு கானல் நீராகப் போய்விட்டது.
அதேசமயம் பாலா நடித்து நேற்று வெளிவந்த 'காந்தி கண்ணாடி' படம் ஓரளவிற்கு ரசிகர்களின் வரவேற்பைப் பெற்றுள்ளது. இப்படத்திற்கான பத்திரிகையாளர் சந்திப்பு, காட்சி என நடத்தி மக்களிடம் கொண்டு போய் சேர்க்க படக்குழு நிறையவே முயற்சித்துள்ளது. தங்களுடன் நட்பு வட்டத்தில் இருக்கும் டிவி பிரபலங்களையும் அழைத்து படத்தைப் பார்க்க வைத்து என்னென்னமோ செய்து வருகிறார்கள். தியேட்டர்களிலும் ஓரளவிற்கு வரவேற்பு கிடைத்துள்ளது. விமர்சனங்களும் பாசிட்டிவ்வாக வருவதால் ஓடிடியில் வரும் போது இப்படம் மேலும் சென்றடைய வாய்ப்புள்ளது.