பிளாஷ்பேக் : நிஜ ரவுடியின் பாதிப்பில் நிறைவான நடிப்பை வழங்கிய ரஜினியின் “தப்புத்தாளங்கள்” | ரஜினி 50 - மீண்டும் திரைக்கு வருகிறது படையப்பா | நேசிப்பாயா'-வை எதிர்பார்த்து காத்திருந்த அதிதி ஷங்கர் | சூர்யாவிற்கு வில்லனாக ஆர்.ஜே.பாலாஜி | நோட்டீஸ் அனுப்பிய காவல்துறை : அல்லு அர்ஜுன் எடுத்த முடிவு | திருப்பதி கோவிலில் சாமி தரிசனம் செய்த ஜான்வி கபூர் | ஹிந்தியில் 800 கோடி கிளப்பை ஆரம்பித்து வைத்த 'புஷ்பா 2' | என் சினிமா வாழ்க்கையில் இதுவே முதல் முறை - மீனாட்சி சவுத்ரி | தன்னம்பிக்கையும், விடாமுயற்சியும் கொண்ட மனிதர் அஜித் - நடன இயக்குனர் கல்யாண் | யுவன் சங்கர் ராஜாவை புகழும் சிவகார்த்திகேயன் |
கடந்த வருடம் மலையாளத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றியையும், வசூலையும் பெற்ற படங்கள் பட்டியலில் மஞ்சும்மேல் பாய்ஸ் மற்றும் ஆவேசம் ஆகிய படங்களுக்கு மிக முக்கிய இடங்கள் உண்டு. இதில் மஞ்சும்மேல் பாய்ஸ் படத்தை சிதம்பரம் இயக்கியிருந்தார். கேரளாவில் இருந்து ஒரு நண்பர்கள் குழு கொடைக்கானலுக்கு சுற்றுலா செல்லும்போது அங்குள்ள குணா குகையில் நண்பர் ஒருவர் தவறி விழுந்து விட அவரை சக நண்பர்கள் போராடி காப்பாற்றுவது தான் படத்தின் கதை. உணர்ச்சிபூர்வமாக இந்த படத்தை கொடுத்து மலையாளம் தாண்டி தமிழ் ரசிகர்களையும் வசியப்படுத்தி இருந்தார் இயக்குனர் சிதம்பரம்.
அதேப்போல காமெடி தாதா வகை கதையில் ஆவேசம் திரைப்படத்தை வித்தியாசமான பாணியில் உருவாக்கி இருந்தார் இயக்குனர் ஜித்து மாதவன். குறிப்பாக நடிகர் பஹத் பாசிலை வித்தியாசமான தோற்றத்தில் வித்தியாசமான நடிப்பில் வெளிகாட்டி இருந்தார். இந்த படமும் 100 கோடி வசூலித்தது. இந்த படத்தின் வெற்றி காரணமாக அடுத்து அவர் மோகன்லாலை வைத்து படம் இயக்கப் போகிறார்.
இது ஒரு பக்கம் இருக்க தற்போது கன்னடத்தில் நடிகர் யஷ் நடிப்பில் கீத்து மோகன்தாஸ் இயக்கத்தில் டாக்ஸிக் என்கிற படத்தை தயாரித்து வரும் நிறுவனம் தாங்கள் புதிதாக தயாரிக்கும் படத்தில் ஜித்து மாதவன் மற்றும் சிதம்பரம் இருவரும் இணைந்துள்ளார்கள் என்கிற புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்த அறிவிப்பை இரண்டு இயக்குனர்களும் உறுதிப்படுத்தியுள்ளனர். அனேகமாக இந்த படத்திற்கு ஜித்து மாதவன் கதை எழுதுவார் என்றும் சிதம்பரம் இந்த படத்தை இயக்குவார் என்றும் தெரிகிறது.