ஜெயராம், காளிதாஸ் இணைந்து நடத்துள்ள படத்தின் ரிலீஸ் தேதி அறிவிப்பு | ரம்பா மகளா இவர்?; பிறந்தநாள் கொண்டாடிய லான்யா | மலையாள 'எக்கோ' பட நடிகையை பாராட்டிய தனுஷ் | 'திரிஷ்யம் 3' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த மோகன்லால் | எனக்கு நானே போட்டி: கிர்த்தி ஷெட்டியின் தன்னம்பிக்கை | விஜே சித்துவின் 'டயங்கரம்' படத்தின் முதல் பார்வை வெளியானது! | தனுஷ் 54வது படத்தின் தலைப்பு 'கர' | அருள்நிதி, ஆரவ் இணைந்து நடிக்கும் 'அருள்வான்' | பிளாஷ்பேக்: நடிகர் திலகத்தின் திரைப்படத்தில் அறிமுகமான இளைய திலகம் | ஜனநாயகன் பட விவகாரம் ; விஜய் தரப்பு மேல்முறையீட்டு மனு: தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம் |

மலையாள திரையுலகில் 50 வருடங்களாக பிரபலமான நாவல் எழுத்தாளர், கதாசிரியர் மற்றும் இயக்குனர் என பன்முக திறமையுடன் வலம் வந்தவர் எம்.டி வாசுதேவன் நாயர், இவரது பல சிறுகதைகளும் நாவல்களும் மலையாளத்தில் திரைப்படங்களாக உருவாகி இருக்கின்றன. மோகன்லால், மம்முட்டி போன்ற முன்னணி நடிகர்கள் இவரது கதைகளிலும் இவரது டைரக்ஷனிலும் கூட நடித்திருக்கிறார்கள்.
91 வயதான இவர் திடீரென ஏற்பட்ட உடல் நலக்குறைவால் கடந்த சில நாட்களுக்கு முன்பு காலமானார். மலையாளத் திரை உலகை சேர்ந்தவர்களும் இந்தியாவில் உள்ள பல்வேறு திரையுலக, அரசியல் பிரபலங்களும் கூட இவரது மறைவுக்கு தங்களது இரங்கல்களை தெரிவித்தனர், மோகன்லால் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்,
ஆனால் இவரது கதையில் உருவான ஒரு வடக்கன் வீரகதா, பழசி ராஜா உள்ளிட்ட படங்களில் நடித்து பெயர் பெற்றவரான மம்முட்டி இவர் இறந்த சமயத்தில் அசர்பைஜான் நாட்டில் ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டு நடித்து வந்தார். அதனால் அவரால் உடனடியாக கேரளா திரும்ப முடியவில்லை. மேலும் படப்பிடிப்பு முடிந்து அவர் திரும்ப முயற்சித்த சமயத்தில் அசர்பைஜானில் சில நாட்களுக்கு முன்பு ஏற்படுத்த விமான விபத்து காரணமாக அவரது பயணம் இன்னும் சில நாட்கள் தள்ளிப் போய் நேற்று தான் அவர் கொச்சி வந்து சேர்ந்தார். வந்தவுடனேயே நேரடியாக கோழிக்கோட்டில் உள்ள எம்.டி வாசுதேவன் நாயர் வீட்டிற்கு சென்று துக்கம் விசாரித்த மம்முட்டி அவரது மனைவி கலாமண்டலம் சரஸ்வதி மற்றும் மகள் அஸ்வதி ஆகியோருக்கு ஆறுதல் கூறினார். மம்முட்டியுடன் பிரபல காமெடி நடிகரும் இயக்குனருமான ரமேஷ் பிஷரோடியும் உடன் சென்று இருந்தார்.