திருமுருகன் கொடுத்த சர்ப்ரைஸ் : பாண்டி கமல் நெகிழ்ச்சி | தலைமை செயலகத்தில் நுழைவதற்காக முற்றிலும் புதிதாக மாறிய ஸ்ரேயா ரெட்டி | மாரி 2 படத்துக்கு பின் தமிழில் நடிக்காதது ஏன் ? - டொவினோ தாமஸ் விளக்கம் | பிரபாஸ் ஒதுக்கிய வாய்ப்பால் கிடுகிடு வளர்ச்சி அடைந்த அல்லு அர்ஜுன் | 'ராமாயணா' படத்திற்கு புதிய சர்ச்சை | 2024ன் முதல் வசூல் படமாக 'அரண்மனை 4' | அஸ்வினியின் 'கங்கணம்' | பய்யா ஜி: மனோஜ் பாஜ்பாயின் 100வது படம் | வெற்றி நடிக்கும் 'ஆண்மகன்' | ராயன் : தனுஷ் பாடிய ‛அடங்காத அசுரன்' பாடல் வெளியீடு |
கன்னட சினிமாவில் பல வருடங்களாக தனக்கென ஒரு பாணியை உருவாக்கி தனது ரசிகர் வட்டாரத்தை எங்கும் நகரவிடாமல் கட்டிப்போட்டு வைத்திருப்பவர் நடிகர் உபேந்திரா. தற்போது சந்துரு என்பவர் இயக்கத்தில் கப்ஜா என்கிற படத்தில் நடித்து வருகிறார். இந்தப்படத்தில் கிச்சா சுதீப்பும் மிக முக்கியமான கதாபாத்திரம் ஒன்றில், சற்று நீட்டிக்கப்பட்ட கெஸ்ட் ரோலில் நடித்து வருகிறார்.
1946-லிருந்து 1984ஆம் வரையிலான காலகட்டத்தில் நடக்கும் கதையாக இது உருவாகி வருகிறது. இந்தப்படத்திற்காக ஐதராபாத், மும்பை, பாண்டிச்சேரி, பெங்களூர் என நாற்பது நகரங்களில் பிரத்யேகமான செட்டுகள் அமைத்து காட்சிகளை படமாக்கியுள்ளார்கள். அந்தவகையில் இந்தப்படம் பான் இந்தியா படமாக ஒரே நேரத்தில் தென்னிந்திய மொழிகள் நான்கிலும் இந்தி, ஓடியா மற்றும் மராத்தி என 7 மொழிகளில் வெளியாக இருக்கிறதாம்.