என்னை ஏன் டார்கெட் செய்கிறார்கள் : கயாடு லோஹர் வேதனை | பெரிய சம்பளத்தை மட்டுமே எதிர்பார்த்து நான் நடிப்பதில்லை : தீபிகா படுகோனே விளக்கம் | ரன்வீர், சாரா நடித்துள்ள துரந்தர் பட டிரைலர் வெளியானது | ரஜினி படத்திலிருந்து விலகியதால் மீண்டும் கார்த்தியுடன் இணையும் சுந்தர்.சி | பாலகிருஷ்ணா 111வது படத்தில் ராணி ஆக நயன்தாரா | எம்புரான் விமர்சனம் : பிரித்விராஜ் கருத்து | மீண்டும் காமெடி ஹீரோவான சதீஷ் | ஒரே படத்தின் மூலம் தமிழுக்கு வரும் தெலுங்கு, மலையாள ஹீரோயின்கள் | டேனியல் பாலாஜியின் கடைசி படம்: 28ம் தேதி வெளியாகிறது | பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் |

விஷால் நடித்த திமிரு படத்தில் கதாநாயகியை விட முக்கியத்துவம் வாய்ந்த வில்லி கதாபாத்திரத்தில் நடித்து அந்த ஒரு படத்திலேயே ஓஹோ என புகழ்பெற்றவர் நடிகை ஸ்ரேயா ரெட்டி. அதன் பிறகு சில படங்களில் நடித்தாலும் விஷாலின் அண்ணனை திருமணம் செய்து கொண்டு குடும்ப வாழ்க்கையில் செட்டில் ஆகிவிட்டார். கடந்த சில வருடங்களாக மீண்டும் நடிப்பை தொடரும் விதமாக சில படங்களில் நடித்து வருகிறார்.
அந்த வகையில் பிரபாஸ் நடிப்பில் வெளியான சலார், தமிழில் நாயகியை மையப்படுத்தி வெளியான அண்டாவ காணோம் உள்ளிட்ட படங்களில் நடித்திருந்தார் ஸ்ரேயா ரெட்டி. இந்த நிலையில் வசந்த பாலன் தற்போது இயக்கி வரும் தலைமைச் செயலகம் என்கிற வெப் சீரிஸில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் ஸ்ரேயா ரெட்டி. அரசியல் பின்னணி கொண்ட கதை களத்தில் எட்டு பாகங்களாக இந்த வெப் சீரிஸ் உருவாகிறது.
ஏற்கனவே 18 வருடங்களுக்கு முன் வசந்தபாலன் இயக்கிய வெயில் படத்தில் அவருடன் இணைந்து பணியாற்றியுள்ளார் ஸ்ரேயா ரெட்டி. இந்த வெப் சீரிஸில் தனது கதாபாத்திரத்திற்காக பாடி லாங்குவேஜ் உள்ளிட்ட அனைத்தையும் மாற்றி நடித்துள்ளார். மேலும் இது வசந்தபாலன் டைரக்ஷன் என்பதால் எந்த வித மறுப்போ தயக்கமோ இன்றி இதில் நடிக்க ஒப்புக் கொண்டேன் என்று கூறியுள்ளார் ஸ்ரேயா ரெட்டி.