அகண்டா 2 படத்தின் முதல் நாள் வசூல் ரூ.59.50 கோடி | நடிகை பாலியல் கடத்தல் வழக்கு : ஆறு பேருக்கு 20 வருட சிறை | ஜெயிலர் 2 புது அப்டேட் வராது ஏன்? | 'ஹேப்பி ராஜ்' இரண்டு குடும்பங்களின் கதை | பிரீத்தி அஸ்ராணிக்காக கதையை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக் : கன்னட எழுத்தாளர் கதையை படமாக்கிய கே. பாக்யராஜ் | பிளாஷ்பேக்: 70 ஆண்டுகளுக்கு முன்பே கிராமத்தில் எடுக்கப்பட்ட படம் | ஓடிடியில் நேரடியாக வெளியாகும் பார்வதி நாயர் படம் | மீரா மிதுன் மீதான வன்கொடுமை வழக்கை தள்ளுபடி செய்ய கோர்ட் மறுப்பு | திருப்பதியில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த ரஜினிகாந்த் |

சின்னத்திரை ரசிகர்ளின் மிகவும் பேவரைட் சீரியலான எதிர்நீச்சல் தொடர் அதில் நடிக்கும் எதார்த்தமான கதாபாத்திரங்களுக்காகவே அதிகம் விரும்பப்படுகிறது. அதிலும் குணசேகரன் கதாபாத்திரத்தை ரசிக்காதே ஆட்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு நடிகர் மாரிமுத்து அந்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருந்தார். ஆனால், அவரது திடீர் மரணம் காரணமாக எதிர்நீச்சல் தொடரின் கதையில் பல்வேறு மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது.
வேல ராமமூர்த்தி குணசேகரன் கதாபாத்திரத்தில் என்ட்ரி கொடுத்தாலும் சீரியல் பழைய வேகத்திற்கு வரவில்லை. குணசேகரன் கதாபாத்திரமும் அடிக்கடி காணமால் போய்விடுகிறது. இதற்கிடையில் புதிய வில்லன் என கிருஷ்ணா என்ற கதாபாத்திரத்தை நுழைத்துள்ளனர். இதில் இலங்கையை சேர்ந்த ஆர்ஜே நெலு நடித்து வருகிறார். ஏற்கனவே குறும்படங்களிலும், சில படங்களிலும் நடித்தும் இயக்கியும் வந்த ஆர்ஜே நெலு எதிர்நீச்சல் சீரியலின் மூலம் தமிழ் சின்னத்திரையில் என்ட்ரி கொடுத்தார்.
ஆனால், அவர் தற்போது பிரபல இயக்குநரான வசந்தபாலனுடன் நிற்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். இதனால் அவர் மீண்டும் சினிமாவுக்கு செல்கிறாரா? அவர் சினிமாவில் கமிட்டாகிவிட்டால் கிருஷ்ணா கதாபாத்திரமும் காணமல் போகுமா? என ரசிகர்கள் சோகமாக கேட்டு வருகின்றனர்.