எங்களை நாங்களே கலாய்ச்சிப்போம் : 'எல்ஐகே' குழு | கல்லூரி விழாக்களில் நடிகைகளின் 'கிளாமர் நடனம்' : சமூக வலைத்தளங்களில் கண்டனம் | திருவிளையாடல், அவள் ஒரு தொடர்கதை, பைசன் : ஞாயிறு திரைப்படங்கள் | பவழ மல்லி Vs முட்டை கலக்கி - 'யூத்'களுக்குள் கடும் போட்டி | தோழிகளுடன் பால் விளையாடி கையை முறித்துக் கொண்ட யாஷிகா | பேஷஸ் ஆப் கர- தனுஷின் கர படத்தின் முன்னோட்ட வீடியோ வெளியீடு | வட அமெரிக்காவில் கல்கி 2898 ஏடி படத்தின் வசூல் சாதனையை முறியடித்த துரந்தர் 2 | அண்ணன் வாரிசுகளின் பட பூஜைக்கு வந்து வாழ்த்திய பவன் கல்யாண் | முன்னணி இயக்குனர்களின் வாட்ஸ் ஆப் குழு ‛ரெய்னா' : அர்த்தம் தெரியுமா? | இது எனக்கு புது உலகம் : முதல்முறையாக வெப்சீரிஸில் நடிக்கும் சம்யுக்தா |

கடந்த 2017ல் பிரபல மலையாள நடிகை ஒருவர் கேரளாவில் காரில் கடத்தப்பட்டு பாலியல் ரீதியாக துன்புறுத்தலுக்கு ஆளான சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்த வழக்கில் சம்பந்தப்பட்டதாக நடிகர் திலீப் உள்ளிட்ட 10 பேர் மீது குற்றம் சாட்டப்பட்டு வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதில் நடிகர் திலீப் மூன்று மாதம் சிறைவாசம் அனுபவித்து பின்னர் ஜாமீனில் வெளிவந்தார்.
இந்த நிலையில் சமீபத்தில் எர்ணாகுளம் மாவட்ட நீதிமன்றம் இந்த வழக்கு விசாரணையை முடித்து, நடிகர் திலீப் உள்ளிட்ட மூவர் இந்த வழக்கில் குற்றமற்றவர்கள் என கூறி விடுவித்தது. இந்த வழக்கின் முதன்மை குற்றவாளி பல்சர் சுனில் உள்ளிட்ட மீதி ஆறு பேர் மீது குற்றம் உறுதி செய்யப்பட்டது. இந்த நிலையில் தற்போது அந்த ஆறு பேருக்கான தண்டனையை நீதிமன்றம் அறிவித்துள்ளது.
இதன்படி ஆறு பேரும் 20 வருடங்களுக்கு சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும், அபராதமாக தலா ரூபாய் 50,000 செலுத்த வேண்டும் என்றும் தவறினால் அதற்காக இன்னும் ஒரு வருடம் அதிகம் சிறை தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. அதிலும் முதன்மை குற்றவாளியான பல்சர் சுனிலுக்கு இன்னொரு பிரிவின் கீழ் ஐந்து வருடம் கூடுதல் தண்டனை வழங்கப்பட்டாலும் ஒரே சமயத்தில் இந்த இரு தண்டனைகளையும் அனுபவிக்க வேண்டும் என்பதால் அவருக்கும் மொத்தமே 20 வருடம் தண்டனை காலம் தான் என்பது குறிப்பிடத்தக்கது.