2026ம் ஆண்டிலும் தொடரும் வாராவார வெளியீடுகள் | பிளாஷ்பேக் : 'பேசும் படம்' உருவான கதை | பிளாஷ்பேக்: ஒரே ஒரு படத்தில் மட்டும் வில்லனாக நடித்த எம்.கே. ராதா | பொங்கல் விடுமுறை நிறைவு : புதிய படங்களின் நிலவரம்… | 'கைதி 2' : கார்த்தி சொன்னதைச் செய்வாரா லோகேஷ் கனகராஜ் ? | இந்தியாவே எனது வீடு : சர்ச்சைக்கு ஏஆர் ரஹ்மான் விளக்கம் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'தளபதி கச்சேரி' | 2025ம் ஆண்டின் கடைசி வெற்றிப் படம் 'சிறை' - 25வது நாளில்… | வெகுளியாகப் பேசிவிட்டேன் : ஜீவா தந்த விளக்கம் | கவின் 9வது படத்தில் இணைந்த சாண்டி! |

ரஜினிகாந்த் 75வது பிறந்தநாளை முன்னிட்டு , நேற்று ஜெயிலர் 2 படத்தின் அப்டேட் வெளியாகும். படத்தின் சிறப்பு போஸ்டர் அல்லது பாடல் வெளியாகும். ஏதாவது அப்டேட் டை படக்குழு வெளியிடும் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் எதுவும் வரவில்லை. இதனால் பலர் அப்செட். என்னாச்சு என விசாரித்தால் பட ரிலீசுக்கு இன்னும் பல மாதங்கள் இருப்பதால் இப்போது எதுவும் வேணாம் என இயக்குனர் நினைத்துவிட்டார். நேற்று படப்பிடிப்பு நடந்ததால் இந்த விஷயத்தில் ஆர்வம் காண்பிக்கவில்லை. ரஜினி தரப்பும் எந்த பிரஷரும் கொடுக்கவில்லை என் கிறார்கள்.
அதேபோல் ரஜினி பிறந்தநாளுக்கு பிரதமர், முதல்வர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்ட பலர் வாழ்த்து தெரிவித்த நிலையில் தவெக தலைவரும், நடிகருமான விஜய் மட்டும் வாழ்த்து சொல்லாதது சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது.
சென்னையில் நேற்று வீட்டில் இருந்த ரஜினி இன்று திருப்பதியில் சாமி தரிசனம் செய்துள்ளார். படையப்பா ரீ ரிலீசில் வசூல் ஈட்டி வருவதால் ரஜினி மகிழ்ச்சியில் இருக்கிறாராம்.




