தரன் தரும் தரமான இலக்கியம் | பிளாஷ்பேக்: காலம் கடந்தும் பேசப்படும் காவியப் படைப்பு “கண்ணகி” | ஜோதிடத்தை நம்பி படத்தை போட்ட வம்பு நடிகர் | கதை கேட்காமல் நடித்தேன்: 'சர்ப்ரைஸ்' தரும் சாயாதேவி | கந்தன் கருணை, ஆழ்வார், சர்கார் - ஞாயிறு திரைப்படங்கள் | தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வந்த பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரின் முதல் சீசன் நிறைவுற்று இரண்டாவது சீசன் விரைவில் ஆரம்பமாகவுள்ளது. ‛பாண்டியன் ஸ்டோர்ஸ் 2'வின் புரோமோ அண்மையில் வெளியாகிய நிலையில் அதில் ஸ்டாலின் முத்துவை தவிர முதல் சீசனில் இடம்பெற்ற மற்ற எந்த பிரபலங்களும் இடம்பெறவில்லை. நிரோஷா, வீஜே கதிர், வசந்த் வசி, ஆகாஷ் ப்ரேம்குமார், சத்ய சாய் கிருஷ்ணன் என கதைக்களத்திற்கு தகுந்தாற்போல் நடிகர்களை மாற்றிவிட்டனர்.
இந்நிலையில், பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் நடிக்கும் மற்ற நடிகர்கள் யார் யார் என்கிற தகவல்கள் தற்போது கசிந்துள்ளது. வெள்ளித்திரை மற்றும் சின்னத்திரையில் பல முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள அஜய் ரத்னம் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2வில் வில்லனாக நடிக்க இருக்கிறாராம்.
அதேபோல் கதாநாயகி நிகழ்ச்சியில் பங்கேற்ற ஷாலினி ஹீரோயினாகவும், ஹாசினி, ரிஹானா ஆகியோர் சப்போர்ட்டிங் ரோலில் நடிக்க இருப்பதாகவும் சின்னத்திரை வட்டாரங்களிலிருந்து செய்திகள் கசிந்து வருகிறது. புதிய கதைக்களத்துடன் புதிய நடிகர்களுடன் வெளியாகவுள்ள பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வின் மீது ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 வருகிற அக்டோபர் 30 முதல் ஒளிபரப்பாக உள்ளது.