என்னைச் சுற்றி நல்ல ஆண்கள் இல்லை - அனுயா | இவை போதும் : இந்த உலகத்தையே மாற்றிவிடலாம் - சமந்தா | கருணாநிதி நூற்றாண்டு விழா தள்ளிவைப்பு | வாடிவாசல் படத்தில் சூர்யாவுக்கு பதில் அஜித்தா...! - உண்மை என்ன? | தர்ஷன், தர்ஷனா நடிக்கும் புதிய படம் | 'டாக்சிக்' - ரிலீஸ் தேதியுடன் வெளியான யஷ் அடுத்த பட அறிவிப்பு | தனுஷ் இயக்கும் படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி.பிரகாஷ் | மம்முட்டிக்கு பதிலாக ஜாக்கி ஷெரப் | டெவில் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பாலகிருஷ்ணா 109வது படத்தில் இணைந்த பிரபல பாலிவுட் நடிகை |
2006ம் ஆண்டு வெளியான வெயில் படத்தை வசந்தபாலன் இயக்கினார், பரத் நடித்தார். அவருடன் பசுபதி, பாவனா, பிரியங்கா, ரவிமரியா உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள். இந்த படத்தில் தான் ஜி.வி.பிரகாஷ் இசை அமைப்பாளராகவும், ரவிமரியா நடிகராகவும் அறிமுகமானார்கள். தற்போது 16 ஆண்டுகளுக்கு பிறகு வசந்தபாலனும், பரத்தும் மீண்டும் இணைகிறார்கள்.
இதுகுறித்து பரத் தெரிவித்திருப்பதாவது: 2006ல் வசந்தபாலன் வெயில் என்ற காவியத்தை உருவாக்கினார். அவருடன் இணைந்து மீண்டும் பணியாற்றுவதில் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். எனது வரவிருக்கும் அடுத்த படத்தில் அவர் முக்கிய மனிதராக இருக்கப் போகிறார். இதுகுறித்த அறிவிப்புகள் விரைவில் வரும் என்கிறார்.
தற்போது வசந்தபாலன் அநீதி என்ற படத்தை இயக்கி வருகிறார். இந்தியன் 2 படத்தில் ஷங்கருடன் இணைந்துள்ளார். இந்த பணிகள் முடிந்ததும் பரத் படத்தை இயக்குவார் என்று தெரிகிறது. இருவரும் இணைய இருப்பது ஒரு வெப் தொடர் என்றும் கூறப்படுகிறது.