புஷ்பா 2 படத்தில் இணைந்த ஸ்ரீ லீலா! | இரண்டாவது முறையாக இணையும் சிறுத்தை கூட்டணி! | புஷ்பா 2 புரமோஷன் நிகழ்ச்சிகளுக்கு 7 நகரங்களுக்கு செல்லும் படக்குழு! | டெல்லி கணேஷ் மறைவு; திரை பிரபலங்கள் நேரில் அஞ்சலி | ஜி.வி. பிரகாஷ் குமாருக்கு காஸ்ட்லி வாட்ச் பரிசளித்த சிவகார்த்திகேயன் | 10 நாட்களில் ரூ. 200 கோடி எட்டிய அமரன்; லக்கி பாஸ்கர் ரூ.77 கோடியை கடந்தது | மீண்டும் பிரபாஸுடன் இணையும் திரிஷா | ரஜினியை தொடர்ந்து ஜூனியர் என்டிஆரை இயக்கும் நெல்சன்! | புறநானூறு படத்தில் சிவகார்த்திகேயனுடன் மோதும் முன்னணி ஹீரோ | மாலத்தீவில் தோழிகளுடன் ஒன்று கூடிய மகேஷ்பாபு-ராம்சரண் மனைவியர் |
ஷங்கர் இயக்கத்தில் கமல் நடிப்பில் கடந்த 1995இல் வெளியாகி மிகப்பெரிய வெற்றியை பெற்ற படம் இந்தியன். படம் வெளியாகி கிட்டத்தட்ட 25 வருடங்கள் கழிந்த நிலையில் இரண்டு வருடங்களுக்கு முன்பு இந்த படத்தின் இரண்டாம் பாகம் இந்தியன் 2 என்கிற பெயரில் ஆரம்பிக்கப்பட்டது. படப்பிடிப்பில் விபத்து, கொரோனா தாக்கம் உள்ளிட்ட சில காரணங்களால் இந்தப்படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் நடைபெற்ற நிலையில் நிறுத்தி வைக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து ஷங்கர் ராம்சரண் நடிக்கும் படத்தை தெலுங்கில் இயக்கி வருகிறார். பின்னர் நடந்த சுமூகமான பேச்சுவார்த்தைக்கு பின் மீண்டும் படப்பிடிப்பு துவங்கியது.
இந்த நிலையில் கமல் நடித்த விக்ரம் படம் மிகப்பெரிய வெற்றி பெற்றதால் சூட்டோடு சூடாக இந்தியன் 2 படப்பிடிப்பையும் மீண்டும் துவங்கியுள்ளார் ஷங்கர். ஒரே நேரத்தில் இரண்டு படங்களின் படப்பிடிப்பு மாறி மாறி நடைபெறும் என்பதையும் அவர் ஏற்கனவே அறிவித்துள்ளார்.
அந்தவகையில் ஷங்கருக்கு உதவியாக இந்தியன் 2 படம் முழுவதும் அவருக்கு உறுதுணையாக பணியாற்றும் விதமாக அவருடைய மூன்று சீடர்களான இயக்குனர்கள் வசந்தபாலன், அறிவழகன், சிம்புதேவன் ஆகியோர் ஷங்கருடன் இணைந்துள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. இதில் வசந்தபாலன் இந்தியன் படம் எடுக்கப்பட்ட சமயத்திலேயே இயக்குனர் சங்கரிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.