'ரஜினி 173' படத்திற்கு மீண்டும் சிக்கல் ? | சினிமாகான் விழாவில் 'ராமாயணா' | கோஹினூர் வைரம் பின்னணியில் உருவாகும் படம் | மீண்டும் வெளியாகிறது 'அமர்க்களம் ' | சோலோ ஹீரோயினாக சாக்ஷி அகர்வாலின் திரில்லர் படம் | பிளாஷ்பேக் : மகனை அறிமுகப்படுத்திய கேஎஸ் கோபாலகிருஷ்ணன் | ஏப்ரல் 17ல் 4 படங்கள் ரிலீஸ் | பிளாஷ்பேக் : 2 வண்ண தொழில்நுட்பத்தில் தயாரான அதிசயப்பெண் | 100 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'முட்ட கலக்கி' | 'காக்கி சர்க்கஸ்' இயக்குனர் தான் என் காதலர் ; மனம் திறந்த நடிகை |

நடிகர் விஜய் தற்போது தெலுங்கு இயக்குனர் வம்சி இயக்கத்தில் உருவாகி வரும் 'வாரிசு' படத்தில் நடித்து வருகிறார். தமிழ் மற்றும் தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இப்படத்தில் ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்கிறார். அப்பாஸ், பிரபு, வரலக்ஷ்மி சரத்குமார், சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது விசாகப்பட்டினத்தில் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் படப்பிடிப்பு தளத்தில் நடிகை ராஷ்மிகா மந்தனா விஜய்யுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். வாரிசு படப்பிடிப்பு தொடங்கி இன்றுடன் 100 நாட்கள் ஆகி உள்ளது. அந்த மகிழ்ச்சியை கொண்டாடும் விதமாக இந்த செல்பியை எடுத்துள்ளார். தற்போது இந்த புகைப்படம் இணையத்தை கலக்கி வருகிறது .




