விஜய் அண்ணாவுக்கு நிறைய சவால்கள் இருக்கிறது : சவுந்தர்யா ரஜினி | என் மனைவியை காப்பாற்றுங்க : முதல்வர் விஜய்க்கு நடிகர் முத்துக்காளை வேண்டுகோள் | விவாகரத்து வரை சினிமாவிற்கு முழுக்கு, என் குடும்பத்தை கெடுத்தவர் மூன்றெழுத்து நடிகை : ரவி மோகன் கண்ணீர் பேட்டி | 'ஜனநாயகன்' படத்தை கசிய விட்டவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது | ஒன்றிணைந்து பேசுவோம் : திரையுலகினருக்கு கமல்ஹாசன் அழைப்பு | ரவி மோகனை பிரிந்தார் கெனிஷா : சென்னையை விட்டும் வெளியேறினார் | தேவர் மகன் வீட்டில் படமாக்கப்பட்ட மலையாளப் படம் 'தேவர்' | உருவ கேலி : மிருணாள் தாக்கூருக்கு அக்ஷய் குமார் வழங்கிய அறிவுரை | 30 ஆண்டுகள் பிரிவு : கணவருக்கு நன்றி சொன்ன சரிதா | முதல்வர் விஜயை சந்தித்த நடிகர் சங்க நிர்வாகிகள் |

இயக்குனர் ஷங்கரின் மகள் மற்றும் நடிகை அதிதி ஷங்கர். இதுவரை கதாநாயகியாக விருமன், மாவீரன், நேசிப்பாயா , பைரவம் என சில படங்களில் மட்டுமே நடித்துள்ளனர். இந்த படங்கள் எதுவும் அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லவில்லை. இந்த நிலையில் அதிதி ஷங்கர் முழுக்க முழுக்க பெண் முதன்மை கதாபாத்திரம் உள்ள படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்த படத்தை ஈரம், குற்றம் 23 போன்ற த்ரில்லர் படங்களை இயக்கி பெயர் பெற்ற அறிவழகன் இயக்குகிறார். இவர் ஷங்கரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த படத்தை தடம், குற்றம் 23 ஆகிய படங்களை தயாரித்த ரீ தன் தயாரிப்பு நிறுவனர் இந்தர் குமார் தயாரிக்கிறார். விரைவில் இது குறித்து அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்கிறார்கள்.