நேரடியாக ஓடிடியில் வெளியாகும் பிரித்விராஜின் ஹிந்தி படம் | 'பாம்' : காமெடியாக ஒரு படம் | 'என் குறும்பர்கள்' என பதிவிட்ட ரவி மோகன் : 'சூழ்ச்சி' என பதிவிட்ட ஆர்த்தி | தயாரிப்பாளர் சங்கம் - பெப்சி மோதல் : பேசி தீர்க்க கோர்ட் உத்தரவு | ஹிந்தி, தெலுங்கில் ரீமேக் ஆன மேஜர் சுந்தரராஜன் படம் | பிளாஷ்பேக் : மர்மயோகியாக மாறிய கரிகாலன் | பிளாஷ்பேக்: எம் ஜி ஆரின் அரசியல் நிலைபாட்டிற்கு அடித்தளமிட்ட “நம் நாடு” | சினிமா ஆன பெண் குல தெய்வங்களின் கதை | தயாரிப்பாளர் மகன் நடிக்கும் ஆக்ஷன் படம் | மீண்டும் வெளிவரும் 'இதயக்கனி' |
விருமன், மாவீரன் படங்களை தொடர்ந்து தற்போது விஷ்ணு வர்தன் இயக்கியுள்ள நேசிப்பாயா என்ற படத்தில் நடித்திருக்கிறார் அதிதி ஷங்கர். இந்த நிலையில் அடுத்தபடியாக தெலுங்கில் பைரவம் என்ற படத்தில் நடித்து அறிமுகமாகிறார். பெல்லம் கொண்ட சாய் ஸ்ரீநிவாஸ், நாரா ரோகித், மனோஜ் மஞ்சு ஆகியோருடன் அதிதி ஷங்கர் நடித்து வரும் இந்த படத்தை விஜய் கனக மேடலா இயக்குகிறார். இந்த பைரவம் படத்தில் வெண்ணிலா கதாபாத்திரத்தில் நடிக்கும் அதிதி ஷங்கரின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த போஸ்டரில் கிராமத்து கெட்டப்பில் பாவாடை தாவணி உடையணிந்து டூவீலரில் அவர் செல்லும் காட்சி இடம் பெற்றுள்ளது.