நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

தமிழில் 'தி கோட்' படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்திருந்த மீனாட்சி சவுத்ரி, அதையடுத்து தெலுங்கில் மூன்று படங்களில் நடித்து வந்தார். அதில் துல்கர் சல்மானுடன் இணைந்து அவர் நடித்திருந்த லக்கி பாஸ்கர் படம் கடந்த தீபாவளி தினத்தில் திரைக்கு வந்து 100 கோடி வசூலை கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த நிலையில் தெலுங்கில் கருணா குமார் இயக்கத்தில் வருண் தேஜுக்கு ஜோடியாக அவர் நடித்துள்ள 'மட்கா' என்ற படம் நவம்பர் 14ம் தேதியான நேற்று வெளியாகியுள்ளது. இதையடுத்து ரவிதேஜா முல்லபுடி இயக்கத்தில் விஷ்வக் சென்னுக்கு ஜோடியாக மீனாட்சி சவுத்ரி நடித்துள்ள 'மெக்கானிக் ராக்கி' என்ற படம் நவம்பர் 22ம் தேதி வெளியாக உள்ளது. அந்த வகையில் மட்கா படம் திரைக்கு வந்து எட்டே நாட்களில் மீனாட்சி சவுத்ரி நாயகியாக நடித்துள்ள இன்னொரு படமான மெக்கானிக் ராக்கி திரைக்கு வருகிறது.