சத்தங்களுக்கு மத்தியில் புதிய விடியலை நோக்கி பயணம் : கெனிஷாவின் பதிவு வைரல் | நடிகர் ஹம்சவர்தன் 2வது திருமணம் | ஒரு காட்சிக்காக படத்தின் மொத்த உரிமத்தையும் வாங்கிய 'ஜனநாயகன்' படக்குழு | கூகுள் மூலம் தமிழ் கற்று கொண்ட ருக்மணி வசந்த் | கதாநாயகனாக அறிமுகமாகும் பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் | மலையாள ரீமேக் படத்தில் நடிக்கும் விமல் | மீண்டும் இணையும் எழில், விஷ்ணு விஷால் கூட்டணி | பால்டப்பாவை இயக்கும் விஜய் மில்டன் | சாய் தன்ஷிகாவை திருமணம் செய்கிறார் நடிகர் விஷால்.? | கடந்தவாரம் வெளியான படங்களுக்கு வரவேற்பு எப்படி |
சிவகார்த்திகேயன், ஸ்ரீதிவ்யா நடித்த 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' படம் நல்ல வரவேற்பை பெற்றது. இளைஞர்களின் வாழ்க்கையை கொண்டு ஜாலியான ஒரு காதல் படம் தருவது 1930களிலேயே தொடங்கி விட்டது. அப்படியான முதல் படம் 'யூத் லீக் அல்லது வாலிபர் சங்கம்' என்ற படம்.
ஏ.என்.கல்யாணசுந்தரம் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மாதிரிமங்கலம் நடேச அய்யர் நாயகனாகவும், சுபத்ரா நாயகியாகவும் நடித்தனர். இவர்கள் தவிர 20க்கும் மேற்பட்ட இளம் பெண்கள், இளைஞர்கள் நடித்திருந்தார்கள். சாகர் மூவி டோன் நிறுவனம் தயாரித்திருந்தது.
கட்டுப்பாடான குடும்பத்தை சேர்ந்த இளைஞர்கள் தங்களுக்கு காதலித்து திருமணம் செய்ய சுதந்திரமும், உரிமையும் வேண்டும் என்று பெற்றோர்களுக்கு எதிராக வாலிபர் சங்கம் ஒன்றை தொடங்குவார்கள். பெற்றோர் பார்த்து செய்யும் திருமணமே சிறந்தது என்று அவர்களும், காதலித்து செய்யும் திருமணமே சிறந்தது என்று இளைஞர்களும் ஆதாரத்துடன் நிரூபிக்க முயற்சிப்பதும், அதற்காக நடக்கும் காமெடி கலாட்டாக்களும்தான் படம்.
இந்த படத்திற்கு அடுத்ததாக படத்தை இயக்கிய இயக்குனர் ஏ.என்.கல்யாணசுந்தரம் 'லேடீஸ் ஒன்லி' என்ற படத்தை இயக்கப்போவதாக அறிவித்தார். ஆனால் வாலிபர் சங்கம் தோல்வி அடைந்ததால் அந்த திட்டத்தை கைவிட்டார்.