நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

சூரி, சசிகுமார், உன்னி முகுந்தன், மற்றும் பலர் நடிக்க யுவன்ஷங்கர் ராஜா இசையில், ஆர்எஸ் துரை செந்தில்குமார் இயக்கத்தில் கடந்த வருடம் மே மாதம் வெளிவந்த படம் 'கருடன்'. அப்படத்தைத் தெலுங்கில் 'பைரவம்' என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளார்கள். இந்த வாரம் மே 30ம் தேதி இப்படம் வெளியாக உள்ளது.
தெலுங்கில் பெல்லம்கொண்டா சீனிவாஸ், மஞ்சு மனோஜ், நர ரோகித், அதிதி சங்கர், கயல் ஆனந்தி, ஜெயசுதா மற்றும் பலர் நடித்துள்ளார்கள். தமிழில் வந்த 'கருடன்' படம் 50 கோடி வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது. கிராமத்துப் பின்னணியில் நட்பு, துரோகம் என மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப் பொருத்தமான ஒரு படம்.
அதனால் படத்தை தெலுங்கில் ரீமேக் உரிமை வாங்கி முடித்து இந்த வாரம் வெளியிடுகிறார்கள். படத்தின் டிரைலருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இதனால், தமிழைப் போலவே தெலுங்கிலும் இந்தப் படம் வரவேற்பைப் பெறும் என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.