நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

மலையாள சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவர் உன்னி முகுந்தன். தமிழில் சூரி, சசிகுமார் ஆகியோருடன் இணைந்து 'கருடன்' படத்திலும் நடித்துள்ளார். அவர் மீது அவருடைய மேனேஜர் விபின் குமார் போலீசில் புகார் அளித்துள்ளார்.
கடந்த வாரம் மலையாளத்தின் மற்றொரு முன்னணி நடிகரான டொவினோ தாமஸ் நடித்த 'நரிவேட்டா' படம் வெளிவந்தது. அந்தப் படத்தைப் பற்றிப் பாராட்டி சமூக வலைத்தளத்தில் பதிவிட்டுள்ளார் விபின். அதனால், கோபமடைந்த உன்னி முகுந்தன், அவரது மேனேஜர் விபினை வார்த்தைகளாலும், அடித்தும் காயப்படுத்தியுள்ளார் என புகாரில் உள்ளதாம்.
புகார் அளித்த பின்பு, செய்தியாளர்களை சந்தித்த விபின் இது பற்றி கூறியுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் கடும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து உன்னி முகுந்தன் தரப்பில் எந்த விளக்கமும் இதுவரை சொல்லப்படவில்லை. மலையாள சினிமா உலகில் இளம் நடிகர்களுக்கு இடையில் இப்படி ஒரு பொறாமை இருக்கிறதா என ஆச்சரியப்பட வைத்துள்ளது.
உன்னி முகுந்தன் நடித்து கடந்த வருடம் வெளிவந்த 'மார்க்கோ' படம் 100 கோடி வசூலித்து வெற்றிப் படமாக அமைந்தது.