Advertisement

சிறப்புச்செய்திகள்

எனது படத்திற்கும் முறையான அனுமதி பெற வேண்டும் : பவன் கல்யாண் | கமல், திரிஷாவை கதாபாத்திரங்களாகப் பார்க்க வேண்டும் : மணிரத்னம் | சசிகுமாரின் 'டூரிஸ்ட் பேமிலி' படத்தை பாராட்டிய நானி! | அனிருத்துக்கு விஜய் தேவரகொண்டா அளித்த இரண்டு பரிசு! | 'பராசக்தி' டைட்டிலை விட்டுக் கொடுத்தது ஏன்? -சொல்கிறார் விஜய் ஆண்டனி | ஓ மாறா - 'தக்லைப்' படத்தில் சிம்புவின் லிரிக் வீடியோ வெளியானது! | ஜூன் இரண்டாம் தேதி ஓடிடியில் வெளியாகும் 'டூரிஸ்ட் பேமிலி' | 'கண்ணப்பா' படத்தின் ஹார்ட் டிஸ்க் மாயம்?: பட ரிலீசுக்கு சிக்கலா? | 'கருடன்' போல வரவேற்பைப் பெறுமா : தெலுங்கு ரீமேக் 'பைரவம்' | பிளாஷ்பேக்: பாகங்களை மாற்றி திரையிட்டு, வேகமெடுத்த “மெல்லத் திறந்தது கதவு” |

நீங்கள் இங்கே இருக்கிறீர்கள்: முகப்பு » கோலிவுட் செய்திகள் »

'டர்ட்டி பி.ஆர். கேம்ஸ்' : சந்தீப் ரெட்டி வங்கா கடும் கோபம்

27 மே, 2025 - 10:30 IST
எழுத்தின் அளவு:
Dirty-PR-Games-Sandeep-Reddy-Vanga-is-very-angry

தெலுங்கில் 'அர்ஜுன் ரெட்டி', ஹிந்தியில் 'கபீர் சிங், அனிமல்' படங்கள் மூலம் பிரபலமானவர் தெலுங்கு இயக்குனர் சந்தீப் ரெட்டி வங்கா. அடுத்ததாக பிரபாஸ் கதாநாயகனாக நடிக்கும் 'ஸ்பிரிட்' படத்தை இயக்க உள்ளார். இந்தப் படத்தின் கதாநாயகியாக 'அனிமல்' பட நடிகை டிரிப்டி டிம்ரி நடிக்க உள்ளார்.

இப்படத்தில் முதலில் கதாநாயகியாக நடிக்க தீபிகா படுகோனேவிடம் பேச்சுவார்த்தை நடந்ததாக சொல்லப்பட்டது. அவர் நடிக்க சம்மதித்து பின் படத்திலிருந்து விலகியதாகவும் சர்ச்சை எழுந்தது. அவருக்குப் பதிலாகத்தான் டிரிப்டி டிம்ரி நாயகியாக அறிவிக்கப்பட்டதாகச் சொன்னார்கள்.

இதனிடையே, படத்தின் இயக்குனர் சந்தீப் நேற்று இரவு எக்ஸ் தளத்தில், “ஒரு நடிகைக்கு ஒரு கதையைச் சொல்லும் போது, நான் 100 சதவீத நம்பிக்கை வைக்கிறேன். எங்களுக்குள் ஒரு சொல்லப்படாத ஒப்பந்தம் (வெளிப்படுத்தாத ஒப்பந்தம்) உள்ளது. ஆனால், இதைச் செய்வதன் மூலம், நீங்கள் யார் என்பதை 'வெளிப்படுத்தி உள்ளீர்கள்'. ஒரு இளைய நடிகையை நிராகரித்து என் கதையை வெளியே சொல்வது, இதுதான் உங்கள் பெண்ணியத்தின் குறிக்கோளா ?. ஒரு திரைப்படத் தயாரிப்பாளராக, என் கலைக்குப் பின்னால், நான் பல வருட கடின உழைப்பைக் கொடுத்துள்ளேன். எனக்கு, திரைப்படத் தயாரிப்புதான் எல்லாமே. உங்களுக்கு அது கிடைக்கவில்லை, உங்களுக்கு அது கிடைக்காது, ஒரு போதும் கிடைக்காது.

இதைச் செய்… அடுத்த முறை முழு கதையையும் சொல்லு… ஏனென்றால் அது எனக்கு ஒரு சிறிய வித்தியாசத்தைக் கூட ஏற்படுத்தவில்லை. 'டர்ட்டி பி.ஆர் கேம்ஸ்'. இந்த பழமொழி எனக்கு ரொம்ப பிடித்திருக்கிறது. 'பூனை தூணில் உள்ள ஓட்டையைக் கீறிவிடுகிறது,” என்று பதிவிட்டுள்ளார்.

அவர் தீபிகா படுகோனே பற்றித்தான் இப்படி குறிப்பிட்டுள்ளார் என்று சமூக வலைத்தளங்களில் ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து வருகிறார்கள். பாலிவுட்டில் 'பி.ஆர் டீம்' என முன்னணி சினிமா பிரபலங்களுக்கு ஒரு குழு இருக்கும். தங்களுக்குப் பிடிக்காதவர்களை இப்படி 'பி.ஆர். டீம்' வைத்து செய்திகளைப் பரப்பிவிட்டு அவர்களை இம்சை செய்வதை ஒரு வேலையாகவே வைத்திருக்கிறார்கள் என அதனால் பாதிக்கப்பட்ட சிலர் சொல்லி இருக்கிறார்கள்.

பாலிவுட், டோலிவுட் வட்டாரங்களில் சந்தீப் ரெட்டி வங்காவின் எக்ஸ் பதிவு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து தீபிகா ஏதாவது சொல்வாரா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

Advertisement
கருத்துகள் (0) கருத்தைப் பதிவு செய்ய
மீண்டும் இணையும் தெகிடி கூட்டணி!மீண்டும் இணையும் தெகிடி கூட்டணி! 'கருடன்' நடிகர் உன்னி முகுந்தன் மீது அவரது மேனேஜர் புகார் 'கருடன்' நடிகர் உன்னி முகுந்தன் ...

வாசகர்களே...

நீங்கள் பதிவு செய்யும் கமென்டுகள், செய்திக்கு கீழே வராமல், சைடில் தனி பெட்டியாக வருவது போல் மாற்றி உள்ளோம். இதில் வழக்கம் போல் உங்கள் கருத்துகளை படிக்கலாம். பதிவும் செய்யலாம். இது எப்படி இருக்கிறது என்ற உங்கள் கருத்தை எங்களுக்கு தெரிவியுங்கள். உங்கள் பின்னுாட்டம் மேலும் சிறப்பாக்குவதற்கு உதவி செய்யும். நன்றி

பின்னுாட்டத்தை பதிவு செய்ய

வாசகர் கருத்து

No comments found

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login :
New to Dinamalar ?
(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Advertisement
Advertisement

டாப் 5 படங்கள்

  • வரவிருக்கும் படங்கள் !
    Tamil New Film Na Na
    • நா நா
    • நடிகர் : சசிகுமார் ,சரத்குமார்
    • இயக்குனர் :NV நிர்மல்குமார்
    Tamil New Film Yang Mang Chang
    • எங் மங் சங்
    • நடிகர் : பிரபுதேவா
    • நடிகை : லட்சுமி மேனன்
    • இயக்குனர் :எம்எஸ் அர்ஜூன்
    Tamil New Film Kallapart
    • கள்ளபார்ட்
    • நடிகர் : அரவிந்த் சாமி
    • நடிகை : ரெஜினா
    • இயக்குனர் :ராஜபாண்டி
    Tamil New Film Party
    • பார்ட்டி
    • நடிகர் : ஜெய் ,சரத்குமார்,சந்திரன் (கயல்)
    • நடிகை : ரெஜினா ,நிவேதா பெத்ராஜ்
    • இயக்குனர் :வெங்கட் பிரபு
    dinamalar-advertisement-tariff

    Tweets @dinamalarcinema

    Advertisement
    Copyright © 2025 Dinamalar - No.1 Tamil website in the world. All rights reserved. Mail Us Your Suggestion to webmaster@dinamalar.in