பிளாஷ்பேக்: படிக்க வந்த இடத்தில் நடிக்க வாய்ப்பு; “காதலிக்க நேரமில்லை” நாயகன் ஆனார் ரவிச்சந்திரன் | கதையின் நாயகன் ஆன சூரி பட இயக்குனர் | கார்த்திக்கு கதை சொன்ன நானி பட இயக்குனர் | வி சாந்தாராம் பயோபிக்கில் ஜெயஸ்ரீ கதாபாத்திரத்தில் தமன்னா | ஆதித்யா பாஸ்கர், கவுரி கிஷன் மீண்டும் இணைந்தனர் | மீண்டும் தமிழில் நடிக்கும் அன்னாபென் | அரசன் படத்தின் படப்பிடிப்பு துவங்கியது | சிவாஜி குடும்பத்தை கவுரவிக்கும் பராசக்தி படக்குழு | விஜய் தேவரகொண்டாவிற்கு வில்லன் விஜய் சேதுபதி...? | சூர்யா 47 : நெட்பிளிக்ஸ் முதலீட்டில் அமோக ஆரம்பம் ? |

எதிர்நீச்சல், காக்கி சட்டை, கொடி ஆகிய படங்களை இயக்கியவர் துரை செந்தில்குமார். இவரது இயக்கத்தில் கடைசியாக வெளிவந்த கருடன் படம் மிகப்பெரிய வெற்றி படமாக அமைந்தது. கருடன் படம் தற்போது தெலுங்கில் ரீ-மேக் ஆகி வருகிறது. பெல்லம்கொண்ட சீனிவாஸ் நாயகனாக நடிக்கிறார். கருடன் பட வெற்றிக்குப் பிறகு லெஜண்ட் சரவணனை வைத்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் துரை செந்தில் குமார். இதன் படப்பிடிப்பு நடக்கிறது. இவரது படத்தை முடித்த பின் துரை செந்தில்குமார் இயக்கவுள்ள படத்தில் விஷால் கதாநாயகனாக நடிக்கவுள்ளாராம். இதற்கான பேச்சுவார்த்தை முடிந்துள்ளது. இதனை 5 ஸ்டார் கதிரேசன் தயாரிக்கிறார் என தகவல்கள் தெரிவிக்கின்றன.