எந்த மாற்றமும் தெரியவில்லை : கீர்த்தி சுரேஷ் | ராம்சரணின் அடுத்த படத்திற்கு இசையமைக்கும் ஏ.ஆர்.ரஹ்மான்! | வருகிற மார்ச் 24ம் தேதி நாகார்ஜுனா - அமலா தம்பதியின் மகன் அகில் திருமணம்! | இது சாமி விஷயம்- நறுக் பதில் கொடுத்த யோகி பாபு! | என்னை வியக்க வைத்த தனுஷ் - சேகர் கம்முலா! | 'நிறம் மாறும் உலகில்' படத்தில் 4 கதைகள் | பிளாஷ்பேக் : ஒரே ஹாலிவுட் படத்தை காப்பி அடித்து உருவான இரண்டு தமிழ் படங்கள் | பிளாஷ்பேக் : சொக்கலிங்கம் 'பாகவதர்' ஆனது இப்படித்தான் | சாய் பல்லவிக்கு கிடைத்த ஆசீர்வாதம்! | இந்தியா பசுமையை இழந்து விட்டதால் நியூசிலாந்தில் 'கண்ணப்பா'வை படமாக்கினோம் : விஷ்ணு மஞ்சு |
நடிகை ஐஸ்வர்ய லக்ஷ்மி, விஷால் நடிப்பில் வெளியான 'ஆக்ஷன்' படத்தின் மூலம் தமிழ் ரசிகர்களுக்கு அறிமுகமானவர். தனுஷ் நடிப்பில் வெளியான 'ஜகமே தந்திரம்' படத்தில் இலங்கை தமிழ் பெண்ணாக நடித்தார். கடைசியாக பொன்னியின் செல்வன் படத்தில் பூங்குழலியாக நடித்தார். கட்டா குஸ்தி படத்திலும் நாயகி வேடத்தில் நடித்தார். இந்த நிலையில், தனக்கு திருமணத்துக்கு வரன் தேடிய அனுபவம் பற்றி அவர் தற்போது மனம் திறந்துள்ளார்.
அவர் கூறியதாவது: திருமணம் செய்து கொள்ளலாம் என்ற எண்ணத்தில், மேட்ரிமோனி இணையதளத்தில் பதிவு செய்யும்படி எனது தாயாரிடம் கூறினேன். அதன்படி எனது படத்துடன் கூடிய மணப்பெண் விவரக் குறிப்பு மேட்ரிமோனி தளத்தில் இடம்பெற செய்யப்பட்டது. ஆனால், அதை எல்லோரும் போலி என்று நினைத்து விட்டனர்.
திருமணத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. எட்டு, பத்து வயதில் மட்டுமல்ல, 25 வயதில்கூட திருமணம் என்பது எனக்கு கனவாகவே இருந்தது. குருவாயூரில் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்று நினைத்திருந்தேன். ஆனால் நான் வளர வளர என் பார்வை மாறியது. என்னைச் சுற்றியுள்ள திருமணமானவர்களை நான் பார்க்கும்போது, அவர்களில் பலர் மகிழ்ச்சியாக இல்லை. ஒரு சிலர் மட்டுமே உண்மையிலேயே மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். எனக்கு இப்போது 34 வயதாகிறது, கடந்த ஒரு வருடத்தில், ஒரே ஒரு குடும்பம் மட்டுமே மகிழ்ச்சியாக வாழ்வதைக் கண்டேன். எனக்கு தெளிவும் விழிப்புணர்வும் வந்தபோதுதான் திருமண வாழ்க்கை பற்றி உணர்ந்தேன். இவ்வாறு அவர் கூறினார்.