கிங்டம் படத்தின் புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | சாய் பல்லவியின் முதல் ஹிந்தி படம் நவ., 7ல் ரிலீஸ் | நடிகர்கள் ஸ்ரீகாந்த், கிருஷ்ணாவுக்கு நிபந்தனை ஜாமின் | பழம்பெரும் தெலுங்கு சினிமா பாடலாசிரியர் சிவசக்தி தத்தா மறைவு: இவர் இசையமைப்பாளர் கீரவாணியின் தந்தை | அடுத்த ஆண்டு ‛ராட்சசன் 2' : விஷ்ணு விஷால் கொடுத்த அப்டேட் | விஜய் தேவரகொண்டாவின் கிங்டம் படத்தை வாழ்த்திய ராஷ்மிகா | ஹரிஹர வீரமல்லு படத்தின் தமிழக உரிமை விற்பனை | ராமின் பறந்துபோ படத்தை பாராட்டிய நயன்தாரா | ‛ஆப் ஜெய்சா கோய்' படத்தில் என் கேரக்டர் சவாலானது : மாதவன் | ரஜினி படத்தை இயக்குகிறாரா வினோத் |
தெலுங்கு நடிகர் விஷ்ணு மஞ்சு, தற்போது 'கண்ணப்பா' என்கிற புராண படத்தை தயாரித்து அதில் கதாநாயகனாக நடித்து வருகிறார். முகேஷ் குமார் சிங் இயக்கியுள்ளார். ஜூன் 27ம் தேதி ரிலீஸ் என ஏற்கனவே அறிவித்துள்ளனர். பான் இந்திய படமாக இது உருவாகியுள்ளதால் அதற்கேற்றபடி மலையாளத்தில் இருந்து மோகன்லால், பாலிவுட்டில் இருந்து அக்ஷய் குமார் மற்றும் தெலுங்கில் இருந்து நடிகர் பிரபாஸ் ஆகியோர் மூன்று முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
இந்நிலையில் 'கண்ணப்பா' படத்தின் முக்கியமானக் காட்சிகள் அடங்கிய ஹார்ட் டிஸ்க் காணாமல் போனதாக தகவல் வெளியாகியுள்ளது. மும்பையில் உள்ள ஹைவ் ஸ்டூடியோவில் இருந்து ஹார்ட் டிஸ்க், கொரியர் மூலம் டுவென்டி போர் பிரேம்ஸ் பேக்டரி என்ற நிறுவனத்திற்கு அனுப்பியுள்ளனர். அதனை மே 25ம் தேதி அந்நிறுவனத்தின் ரகு என்பவர் பெற்றுக்கொண்டு, சரிதா என்ற மற்றொரு ஊழியரிடம் கொடுத்துள்ளார். அதனை வாங்கிய சரிதா, அடுத்த சில நிமிடங்களில் தலைமறைவாகியுள்ளார்.
இதுப்பற்றி அந்நிறுவனத்தின் ரெட்டி விஜயகுமார் போலீசில் புகாரளித்துள்ளார். அதில் ஹார்ட் டிஸ்க்கில் இடம்பெற்றுள்ள காட்சிகள், தகவல்கள் கசிந்தாலோ, நீக்கப்பட்டாலோ, தனது நிறுவனம் ஈடுசெய்ய முடியாத நிதி இழப்பை சந்திக்கும். ஹார்ட் டிஸ்க்கை மீட்டு உடனடியாக தன்னிடம் ஒப்படைக்குமாறு கூறியுள்ளார். வழக்குப்பதிவு செய்த போலீசார் சரிதா என்பவரை தேடி வருகின்றனர். ரிலீசுக்கு இன்னும் சரியாக ஒரு மாதமே இருக்கும் நிலையில், இந்த சம்பவத்தால் படத்தின் ரிலீசுக்கு பாதிப்பை ஏற்படுத்துமோ என படக்குழுவினர் அதிர்ச்சியில் உள்ளனர்.