விஜய்யின் 'ஜனநாயகன்' : இன்று முக்கிய அறிவிப்பு | சிறிய வெற்றிகளுக்கு பெரிய இதயங்கள் தேவை: 'ஹாட்ரிக்' வெற்றியால் மணிகண்டன் நெகிழ்ச்சி | விவாகரத்து கோரி ஜிவி பிரகாஷ், சைந்தவி மனு தாக்கல் | சலார் சிறுவனை எம்புரானில் நடிக்க வைத்தது ஏன் ? பிரித்விராஜ் ருசிகர தகவல் | சுஷாந்த் சிங் ராஜ்புத் மரணம் ; வழக்கு விசாரணையை முடித்த சிபிஐ | ராபின் ஹுட் புரமோஷனுக்காக ஹைதராபாத் வந்த டேவிட் வார்னர் | ராஷ்மிகா மகளுடனும் ஜோடியாக நடிப்பேன் : சல்மான்கான் | எதுக்கு கடைசி நேர டென்ஷன் ? பிரித்விராஜ் நெத்தியடி கேள்வி | மலையாளப் படத்திற்கு முக்கியத்துவம் தரும் ரெட் ஜெயண்ட்? | பிரியதர்ஷினின் 100வது படத்தில் நடிப்பதை உறுதி செய்த மோகன்லால் |
2025ம் ஆண்டிற்கான ஆஸ்கர் விருது போட்டியில் சிறந்த வெளிநாட்டுப் படங்களுக்கான பிரிவில் கலந்து கொள்ள ஹிந்தித் திரைப்படமான 'லாபட்டா லேடீஸ்' படம் தேர்வு செய்து அனுப்பப்படுகிறது.
“கொட்டுக்காளி, மகாராஜா, ஜிகர்தண்டா டபுள் எக்ஸ், தங்கலான், ஜமா, வாழை' உள்ளிட்ட தமிழ்ப் படங்கள், 'ஆட்டம், உள்ளொழுக்கு, ஆடு ஜீவிதம், ஆல் வி இமேஜின் அஸ் லைட்' ஆகிய மலையாளப் படங்கள், 'ஹனுமான், கல்கி 2898 எடி, மங்களவாரம்” ஆகிய தமிழ்ப் படங்கள் உள்ளிட்ட மொத்தம் 29 படங்கள் ஆஸ்கர் தேர்வுக்காக விண்ணப்பித்த படங்களாக இருந்தன.
இந்தப் போட்டியில் 12 ஹிந்திப் படங்களும் போட்டியிட்டன. மேலும், 2 மராத்தி படங்கள், ஒரு ஒரியப் படம் ஆகியவையும் போட்டியில் இடம் பெற்றன. இவற்றிலிருந்து ஹிந்திப் படமான 'லாபட்டா லேடீஸ்' படத்தை இந்தியா சார்பாகத் தேர்வு செய்து அனுப்புகிறது பிலிம் பெடரேஷன் ஆப் இந்தியா.
வழக்கம் போலவே இந்தத் தேர்வுக்கு சில ஆதரவுக் குரல்களும், எதிர்ப்புக் குரல்களும் எழுந்துள்ள. தமிழில், 'வெயில், அங்காடித் தெரு, அரவான்' உள்ளிட்ட படங்களை இயக்கிய இயக்குனர் வசந்த பாலன் இது குறித்து, “லாபட்டா லேடீஸ்' இந்தி திரைப்படம் பொழுதுபோக்கு தன்மைக்காகவும் சுவாரஸ்யத்திற்காகவும் உருவாக்கப்பட்ட ஒரு பீல் குட் டிராமா திரைப்படம். ஆனால் அதை விட கொட்டுக்காளியோ, உள்ளொழுக்கோ, ஆடு ஜீவிதமோ இந்தியா சார்பாக ஆஸ்கருக்கு அனுப்பப்பட்டிருக்கலாம்,” என பேஸ்புக்கில் பதிவு செய்துள்ளார்.