செப்., 19ல் ‛கிஸ்' ரிலீஸ் | டிரோல்களுக்கு ஜான்வி கபூர் கொடுத்த விளக்கம் | அழகுக்கு அனன்யா பாண்டே தரும் ‛டிப்ஸ்' | தமிழ் சினிமாவை அழிக்கும் நோய் : ஆர்கே செல்வமணி வேதனை | மீண்டும் ஹீரோவான 90ஸ் நாயகன் ஆக்ஷன் கிங் அர்ஜுன்! | ஐகோர்ட் உத்தரவு : ரவி மோகன் சொத்துக்களை முடக்க வாய்ப்பு | ‛தக் லைப்' தோல்வி கமலை பாதித்ததா... : ஸ்ருதிஹாசன் கொடுத்த பதில் | ஜெயிலர் 2 வில் இணைந்த சுராஜ் வெஞ்சாரமூடு | அக்டோபரில் துவங்குகிறது பிக்பாஸ் சீசன் 9 | அசோக் செல்வன் ஜோடியான நிமிஷா சஜயன் |
டாக்டர், எதற்கும் துணிந்தவன், டான், கேப்டன் மில்லர் போன்ற தமிழ் படங்களில் நடித்தவர் பிரியங்கா மோகன். தற்போது ஜெயம் ரவி உடன் ‛பிரதர்' படத்தில் நடித்துள்ளார். இதுதவிர தெலுங்கிலும் நடித்து வருகிறார். இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ஜி ஸ்குவாட் நிறுவனத்தின் மூலம் படங்களை தயாரிக்க தொடங்கியுள்ளார். சமீபத்தில் லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 2வது படமாக 'பென்ஸ்' என்ற படத்தின் அறிவிப்பு வந்தது.
லோகேஷ் கதையில் உருவாகும் இப்படத்தை ரெமோ பட இயக்குனர் பாக்கியராஜ் கண்ணன் இயக்குகிறார். இதில் கதாநாயகனாக ராகவா லாரன்ஸ் நடிக்கின்றார். தற்போது இதன் ப்ரீ புரொடக்ஷன் பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. விரைவில் இதன் படப்பிடிப்பு துவங்குகிறது. இந்த நிலையில் இந்த படத்தில் கதாநாயகியாக நடிக்க பிரியங்கா மோகன் ஒப்பந்தம் ஆகியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.