ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணையும் படத்தின் இயக்குனர் தேர்வு ? | தனுஷ் 55ல் சாய் அபயங்கர் | சிம்புவிற்கு ஜோடியாக மிருணாள் தாகூர்? | 'இதயம் முரளி' படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியானது! | 'டான்-3'ல் இருந்து வெளியேறிய ரன்வீர் சிங் ; இயக்குனர் எடுத்த அதிரடி முடிவு | திருப்பதியில் தனுஷ் வழிபாடு : மகனை நடிகராக்குகிறாரா... | லோகேஷ் கனகராஜ், அல்லு அர்ஜூன் படத்தில் ஷ்ரத்தா கபூர்? | இறுகப்பற்று படத்தினால் நடந்த நல்லது : விக்ரம் பிரபு நெகிழ்ச்சி | பிப்.,13ல் ‛லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' வெளியாக வாய்ப்பு | ரீ ரிலீஸ் ஆகும் சூர்யாவின் காக்க காக்க |

தமிழில் தீரன் அதிகாரம் ஒன்று, அயலான், இந்தியன் 2, உள்ளிட்ட படங்களில் நடித்தவர் ரகுல் ப்ரீத் சிங். தெலுங்கிலும் ஒரு ரவுண்ட் வலம் வந்த நடிகை ரகுல் ப்ரீத் சிங், தற்போது பாலிவுட்டில் தான் அதிகம் நடிக்கிறார். தென்னிந்திய மொழிகளில் நடிப்பதை குறைத்துவிட்டார். பாலிவுட் தயாரிப்பாளர் ஜாக்கி பக்னானியை திருமணம் செய்து கொண்ட ரகுல் ப்ரீத் சிங் பாலிவுட் அறிமுகத்தின் போது சந்தித்த அவமானங்கள் குறித்து ஒரு பேட்டியில் மனம் திறந்துள்ளார்.
அவர் கூறியதாவது: எந்தவித பின்னணியும் இல்லாமல் சினிமா துறையில் நுழையும்போது, மக்களிடம் அறிமுகமாக கணிசமான நேரத்தை செலவிட வேண்டியிருக்கும். பாலிவுட் இயக்குனர்கள் மற்றும் தயாரிப்பாளர்களை அடைய பல ஆண்டுகள் ஆனது. அங்கு (பாலிவுட்டில்) சில நேரங்களில் ஆடிஷன் இயக்குனர்கள் எனது அழைப்புகளுக்கு கூட பதிலளிக்காமல் இருந்தனர்.
ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கானவர்கள் சினிமாவில் நுழைய முயற்சிப்பதால், ஆரம்ப கட்டம் மிகவும் சவாலானது. எனவே, புதிதாக சினிமாவுக்குள் நுழைய விரும்புபவர்கள் முதல் வாய்ப்பிலேயே தேர்வாகிவிடலாம் என்ற மாயையில் இருந்துவிடக் கூடாது. கடின உழைப்பும் மனதிடமும் அவசியம்; திறமை இறுதியில் அங்கீகரிக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.




