'மாரீசன்' படம் ஜூலை 25ல் வெளியாகிறது | ராஜமவுலி படம் மூலம் இந்திய திரையுலகிற்கு திரும்புவது உற்சாகம் : பிரியங்கா சோப்ரா | 7500 தியேட்டர்களில் வெளியாகும் வார் 2 | கால வரையறையின்றி ஒத்திவைக்கப்பட்ட அனுஷ்காவின் ‛காட்டி' | ஹீரோவாகும் ‛டூரிஸ்ட் பேமிலி' இயக்குனர் அபிஷன் ஜீவிந்த் | வேள்பாரி நாவலில் ரஜினிகாந்த்? | பாராட்டுக்கள் கிடைத்தும் வசூலை அள்ளாத 'கண்ணப்பா' | 50வது நாளைக் கடந்த 'மாமன்', நன்றி தெரிவித்த சூரி | ஹரிஹர வீரமல்லு : யு டியூபில் மட்டும் 60 மில்லியன் பார்வைகள் | 'சப்தம்' படத்தை ஓடிடியில் வெளியிட நீதிமன்றம் தடை |
தெலுங்கு திரையுலகில் இளம் முன்னணி நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு புஷ்பா திரைப்படம் வெளியாகி சூப்பர் ஹிட் ஆனது. அதன் இரண்டாம் பாகம் புஷ்பா 2 என்கிற பெயரில் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ஏற்கனவே மலையாளத்தில் அல்லு அர்ஜுனுக்கு அதிக அளவில் ரசிகர்கள் இருக்கும் நிலையில் இந்த புஷ்பா படம் மூலம் தென்னிந்தியா மட்டும் இல்லாது இந்தியிலும் அவருக்கு அதிக அளவில் ரசிகர்கள் உருவாகி உள்ளனர்.
கடந்த 2003ல் கங்கோத்ரி என்கிற படம் மூலம் அல்லு அர்ஜுன் கதாநாயகனாக அறிமுகமானாலும் அதற்கு அடுத்த வருடம் சுகுமார் இயக்கத்தில் வெளியான ஆர்யா திரைப்படம் தான் அல்லு அர்ஜுனின் திரை உலக பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இயக்குனர் சுகுமாருக்கும் அதுதான் முதல் படம் என்பதும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இந்த படத்திற்காக முதலில் சுகுமார் அணுகியது ரவி தேஜா மற்றும் பிரபாஸை தான். ரவி தேஜாவிற்கு கதை பிடித்திருந்தாலும் வேறு சில படங்களில் நடிக்க வேண்டி இருந்ததால் அதை ஒப்புக் கொள்ள முடியவில்லை. அதே சமயம் பிரபாஸ் இந்த படத்தின் கதையை கேட்டதும் இந்த கதை தனக்கு செட் ஆகுமா? என்பது போன்று சில சந்தேகங்களை எழுப்பியுள்ளார்.
அந்த சமயத்தில் தான் ஒரு படத்தின் பிரிவியூ காட்சியின் போது அல்லு அர்ஜுனை சந்தித்த சுகுமார் அவரது நடை உடை பாவனைகளை கவனித்து தனது ஆர்யா படத்திற்கு இவர் தான் சரியாக இருப்பார் என தேர்வு செய்தார். அவரது தேர்வு சரி என நிரூபிப்பது போல ஆர்யாவும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. அந்த படம் வெளியாகி 20 வருடம் கடந்துவிட்ட நிலையில் தற்போதும் அல்லு அர்ஜுன்-சுகுமார் கூட்டணி புஷ்பா மூலம் வெற்றிகரமாக தொடர்வது குறிப்பிடத்தக்கது.